சீனாவில் மழை போல் கொட்டிய "மனித மலம்.." தெறித்து ஓடிய மக்கள்.. அச்சச்சோ! கனவில் கூட நடக்காத சம்பவம்
பீஜிங்: யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்காத முடியாத அளவுக்கு ஒரு விசித்திரமான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. கழிவு நீர் குழாய் வெடித்து சிதறியதில் மனித மலம் மழை போல மக்கள் மீது கொட்டியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது. அதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சீனாவின் தெற்கு பகுதியில் வியட்நாம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரம் நான்னிங். சீனாவின் பரபரப்பு மிக்க நகரங்களில் ஒன்றாக இதுவும் உள்ளது. இங்குள்ள பிசியான சாலைகளில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும். இந்த நிலையில் தான் அங்குள்ள பரபரப்பான ஒரு இடத்தில் சாலையின் நடுவே கழிவு நீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் கட்டுமான பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

கட்டுமான பணியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் திடீரென கழிவு நீர் குழாய் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. கழிவு நீர் குழாய் வெடித்ததும் அதிலிருந்து மனித மலம் 33 அடி உயரத்திற்கு பீறிட்டு பாய்ந்தது. துர்நாற்றத்துடன் மழை போல கொட்டியதால் என்னடா இதுன்னு... அங்குள்ள வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மூக்கை பிடித்தபடி அதிர்ச்சியில் உறைந்தனர்.
சில கார்களின் ஜன்னல் கண்ணாடி, முன்பக்க கண்ணாடி முழுவதும் மனிதக் கழிவுப் படிந்தது.. நடந்து சென்ற சிலரின் தலை முதல் கால் வரை மனித மலம் மழை போல் பொழிந்ததால் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். சினிமாவில் கூட இப்படி எல்லாம் நடக்காது என யோசிக்கும் அளவுக்கு இந்த விசித்திரமான சம்பவம் கடந்த 24 ஆம் தேதி சீனாவில் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
காரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவான காட்சியில் தண்ணீர் போல செங்குத்தாக பல அடி உயரத்திற்கு சென்ற மனித கழிவுகள் மஞ்சள் மழையாக கொட்டுகிறது. வீடியோ எடுத்த காரின் முன்பக்க கண்ணாடி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியதால் வாகனத்தை இயக்க முடியாத நிலைக்கு அந்த வாகன ஓட்டி தள்ளப்பட்டார்.. ஒரு சில நிமிடங்கள் வரை இந்த மஞ்சள் மழை நீடித்தது.
🔥🚨BREAKING: Poop exploded everywhere landing on the road, cars, people, and pets the moment a sewage pipe pressure test in Nanning failed. This scene of horror shows feces falling from the sky after the initial explosion in China. pic.twitter.com/qD56fUTQuA
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) September 27, 2024
அதாவது மழை பெய்வது போல மனித மலம் பொழிந்தது. சாலையில் திபுதிபுவென ஆலங்கட்டி மழை போல விழுந்தது. அந்த இடம் முழுவதுமே மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. சுமார் 300 மீட்டர் சுற்றளவிற்கு இந்த மனித மலம் பரவி விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் உடனடியாக வந்து தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணிகளை முடுக்கி விட்டனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் குழாயில் அழுத்த அளவு எந்த அளவுக்கு உள்ளது? என்பது குறித்து கட்டுமான பணியாளர்கள் சோதித்துப் பார்த்தபோதுதான் இந்த திடீர் வெடிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த தகவலை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர்.
கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்து இல்லை இது எனவும் கூறினர்.. எது எப்படியோ அன்றைய நாள் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக வாகன ஓட்டிகளுக்கு மாறிப்போனது தான் உண்மை என நெட்டிசன்கள் பலரும் அங்குள்ள மக்களின் நிலைமையே பரிதாபமாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.. சில நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்க்கும் வகையிலும் பதிவிட்டுள்ளனர்
இப்படி எல்லாம் ஒரு நிகழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அங்குள்ள மக்கள் பாவம் தான் என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அதேபோல எவ்வளவோ தொழில்நுட்பத்தில் முன்னேறி விட்டதாக கூறிக் கொள்ளும் சீனாவில் இப்படியான சம்பவங்கள் நடப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது எனவும் மற்றொரு நெட்டிசன் கூறியிருக்கிறார்.
வீடியோவில் பார்க்கவே உடம்பெல்லாம் ஒரு மாதிரி கூசுகிறது அங்கிருந்தவர்களின் நிலைமை பாவம்தான். நல்ல வேலையாக கேமராவில் துர்நாற்றம் எல்லாம் வராது... என்று மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்பான வீடியோக்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது. நல்ல வேலையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சில வாகனங்கள் தான் சேதம் அடைந்தது என்றும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications