கிரீன் சிக்னல் தந்த தாலிபான்.. தகர்ந்தது தடை! ஆப்கனில் மேல்நிலை பள்ளிகளுக்கு மாணவிகள் படையெடுப்பு!
காபூல்: ஆப்கனில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இன்று முதல் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 7 மாதங்களுக்கு பிறகு மாணவிகள் ஆர்வமாக பள்ளிகளுக்கு சென்றனர்.
Recommended Video
ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து உள்நாட்டு போர் துவங்கியது. 2021 ஆகஸ்டில் ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்தனர். புதிய தலைவராக முல்லா பாரதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இதனால் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் ஆப்கன் அரசுக்கு தடை விதித்துள்ளன.

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு
இதற்கிடையே தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கனில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவிகள், ஆசிரியைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

12 வயது வரை அனுமதி
இதையடுத்து தாலிபான்கள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தினர். அதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 7 ம் வகுப்ப வரை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மாணவ-மாணவிகள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 8 முதல் அதற்கு அடுத்த நிலையில் உள்ள வகுப்புகளுக்கு மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. சமீபத்தில் பல்கலைக்கழகங்கள் திறந்தாலும் மாணவர்கள் மட்டுமே சென்றனர். பெரும்பாலானா பெண்கள் செல்லவில்லை.

மேல்நிலை பள்ளிகள் திறப்பு
இந்நிலையில் மார்ச் மாதம் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தாலிபான் அரசு அறிவித்தது. அதன்படி இன்று தலைநகர் காபூல் உள்ப பல்வேறு மகாணங்களில் மேல்நிலை பள்ளிகளுக்கு மாணவிகள் ஆர்வமாக சென்றனர். இதன்மூலம் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு மாணவிகள் சென்றுள்ளனர். இருப்பினும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி வகுப்புகள் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன
இதுகுறித்து ஆப்கனின் கல்வி அமைச்சக செய்தி தொடர்பாகளர் அஜிஸ் அகமது ராயன் கூறுகையில்,‛‛சர்வதேச சமூகத்தை மகிழ்ச்சி அடைய செய்யவே, உலக அரங்கில் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ பள்ளிகளை மீண்டும் திறக்கவில்லை. எங்கள் மாணவிகளுக்கு கல்வி மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்காகவே நாங்கள் இதை செய்கிறோம். பள்ளிகளில் 12 முதல் 19 வயது வரையிலான மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர்'' என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications