காதலி கார் ஓட்ட.. பக்கத்தில் போதையில் உட்கார்ந்த கணவர்.. பிறகு நடந்த சம்பவம்? கோர்ட்டுக்கு போன மனைவி
பெய்ஜிங்: இறந்துபோன கணவரின் மனைவி கேட்ட இழப்பீட்டு தொகையை கேட்டு, நீதிமன்றமே அதிர்ந்துபோனது.. சீனாவில் நடந்த இந்த சம்பவம் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதில் பலரும் தவறான உறவுமுறை குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சீனாவை சேர்ந்தவர் வாங்.. இவரது தோழி பெயர் லியு.. இவர்கள் 2 பேருக்குமே திருமணமாகிவிட்டது.. ஒருகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் கள்ளக்காதல் அரும்பியது.. இதனால் இருவருமே யாருக்குமே தெரியாமல், தங்கள் உறவை கடைப்பிடித்து வந்தனர்.

கருத்து வேறுபாடு: கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில், இந்த ஜோடி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் முற்றியது.. இதனால், 2 பேருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு உறவையும் அத்துடன் துண்டித்து கொண்டனர். அதற்கு பிறகு இருவருமே சந்தித்து கொள்ளவில்லை.
இந்நிலையில், சம்பவத்தன்று எதேச்சையாக 2 பேரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியதாயிற்று. இதனால் இருவருமே பழையதை மறந்து, நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள்.. பிறகு ஓட்டலுக்கு சென்று மது அருந்தியிருக்கிறார்கள்.. பிறகு இரவு டின்னர் சாப்பிட்டுவிட்டு, குடிபோதையிலேயே காரில் சென்று கொண்டிருந்தனர்.
மதுபோதை: வாங் அதிகமாக குடித்திருந்த நிலையில், லியு கார் ஓட்டியுள்ளார். ஆனால் வாங், சீட்பெல்ட் அணியாமல் உட்கார்ந்து வந்துள்ளார்.. அப்போது திடீரென ஓடும் காரில் இருந்து வாங் கீழே தவறி விழுந்துவிட்டார்.. இதனால் அதிர்ச்சியடைந்த லியு, உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.. ஆனால் மூளையில் பலமான காயம் ஏற்பட்டுவிட்டதால், சிகிச்சை பலனளிக்காமல், வாங் இறந்து விட்டார்..
இந்த விபத்து தொடர்பான விசாரணையை போலீசார் கையில் எடுத்தனர். அப்போது, வாங் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால்தான், காரிலிருந்து கீழே விழுந்துவிட்டதையும், கார் ஓட்டிய லியு மீது எந்த தவறும் இல்லை என்றும் கண்டறிந்தனர்.
இழப்பீடு: ஆனால் இந்த விஷயம் தெரிந்த வாங்கின் மனைவி, தன்னுடைய கணவனின் மறைவுக்கு காரணம் லியுதான் என்றும், அதனால் அந்த காதலியிடம் இழப்பீடாக 6 லட்சம் யுவான் அதாவது நம்ம ஊர் மதிப்பில் சுமார் ரூ.70.36 லட்சம் வேண்டும் என்றும் கேட்டு கோர்ட்டுக்கு போனார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வாங்கின் மனைவி கேட்ட நஷ்ட ஈட்டு தொகையை கேட்டு நீதிபதி அதிர்ந்துவிட்டார்.. "வாங் இறந்து போனதற்கு ஏதோ ஒரு வகையில் லியூ காரணமாக இருந்துள்ளார், அதுக்காக 65,000 யுவான் (சுமார் ரூ. 8 லட்சம்) மட்டுமே செலுத்தினால் போதும்.. வாங்கின் மரணத்திற்கு லியு காரணம் இல்லை" என்று கூறி உயிரிழந்தவரின் மனைவி கேட்ட முழு இழப்பீடு தொகை கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
சிக்கல்கள்: இந்த வழக்கு விவரம்தான் இணையத்திலும் வெளியாகி வைரலாகி, பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது. திருமணத்திற்கு புறம்பான உறவுகளை தவிர்த்தாலே, இதுபோன்ற உயிரிழப்புகள், வழக்குகள், வன்முறைகளை தவிர்க்க முடியும்.. திருமணத்துக்கு புறம்பான உறவுகளால் எப்போதுமே, சிக்கல்கள் மட்டும்தான் கிடைக்கும்" என்றெல்லாம் கருத்துக்களை கூசறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications