7 மாதமாக துபாய் முதலாளி சம்பளம் தரலை... கல்யாணத்தை நிறுத்திய ஹைதராபாத் என்ஜீனியர்
துபாய்: துபாயில் வேலை பார்க்கும் ஹைதராபாத் என்ஜினியர் தன்னுடைய முதலாளி சம்பளம் தராமல் இருப்பதால் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் காதீர்(30). எலக்ட்ரிக்கல் என்ஜினியர். அவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மாதா மாதம் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 644 சம்பளமாக வாங்குகிறார். ஆனால் அவர் பணிபுரியும் நிறுவனம் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் தான் கடைசியாக 3,500 திர்ஹத்தை சம்பளமாக அளித்துள்ளது.

அதன் பிறகு சம்பளம் அளிக்காமல் காதீரிடம் வேலை வாங்கி வருகிறது. இந்நிலையில் அவருக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சம்பளம் கிடைப்பது தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் அவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
திருமணத்தை நிறுத்துவதை தவிர எனக்கு வேறு வழியே இல்லை. சம்பளம் தருகிறோம் காத்திருங்கள் என்று தான் கூறி வருகிறார்கள். என் சகோதரியின் திருமணத்திற்காக இந்தியாவில் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். அந்த கடனை அளித்தவர்களின் மிரட்டல் தாங்க முடியவில்லை. என் சகோதரியின் திருமணத்தை நிறுத்தப் போவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர் என்றார்.
காதீர் தான் பணிபுரியும் நிறுவனம் மீது தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி புகார் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications