For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ஐபோனுக்கு வக்கில்லாதவரா ஒபாமா?... எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்???

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நான் ஒரு ஐபோன் வைத்துக் கொள்ள முடியவிலலை. அதற்கு எனக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார் உலகிலேயே மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபரான பராக் ஒபாமா.

புல்லுக்கட்டு முத்தம்மா முதல் புல் சூட் கோட்டில் உலா வரும் எக்சிகியூட்டிவ் ஆபிஸர் வரை கைகளில் ஐபோன் புழங்கும் காலம் இது. ஆனால் உலகின் சர்வ வல்லமை படைத்த அதிபரிடம் ஐபோன் இல்லை.. காரணம், ரூல்ஸ் அப்படி.

பாதுகாப்பு காரணங்களுக்காக தான் ஐபோன் வைத்துக் கொள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஒபாமா.

செங்கல் போன் தான் சேப்டி பாஸ்...

செங்கல் போன் தான் சேப்டி பாஸ்...

ஒபாமா எப்போதுமே கருப்பு நிறத்திலான, பெரிய சைஸ் பிளாக்பெர்ரி போனைத்தான் இன்னும் வைத்திருக்கிறார். இதைத்தான் அதிகாரிகள் அவருக்கு அனுமதித்துள்ளனர். பாதுகாப்பான போனாம் இது.

ஏன் ஐபோன் இல்லை பாஸ்...?

ஏன் ஐபோன் இல்லை பாஸ்...?

பாதுகாப்பு காரணங்களுக்காக நான் ஐபோன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. எனவேதான் பாதுகாப்பு மிகுந்த பிளாக்பெர்ரியைப் பயன்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ஒபாமா.

ஆனா என் மகள்களிடம் இருக்கே...!

ஆனா என் மகள்களிடம் இருக்கே...!

தொடர்ந்து ஒபாமா கூறுகையில், ஆனால் என் மகள்கள் சாஷாவும், மலியாவும் தத்தமது ஐபோன்களுடன்தான் நாளில் பாதியைச் செலவிடுகிறார்கள். எதையாவது அதில் நோண்டிக் கொண்டே இருப்பார்கள். பாதி நேரத்தை அதிலேயே கழிக்கிறார்கள். நான் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது...

மற்ற போன்களை விட பாதுகாப்பானது பிளாக்பெர்ரி

மற்ற போன்களை விட பாதுகாப்பானது பிளாக்பெர்ரி

உண்மையில் மற்ற ஸ்மார்ட் போன்களை விட பிளாக்பெர்ரிதான் பாதுகாப்பானதாம். அதாவது அதன் என்கிரிப்ஷன் வலுவானு என்கிறார்கள். மற்ற போன்களை ஈஸியாக ஹேக் செய்து விட முடியுமாம். ஆனால் பிளாக்பெர்ரியை நோண்டி உள்ளே புகுவது கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரமாம். இதனால்தான் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள், பிளாக்பெர்ரியை அதிகாரப்பூர்வ போனாக பயன்படுத்த அனுமதித்துள்ளனராம்.

ஆனா முதல்ல அதைக் கூட தரலையே..!

ஆனா முதல்ல அதைக் கூட தரலையே..!

உண்மையில் ஒபாமா அதிபரானபோது அவருக்கு ஒரு செல்போன் கூட கிடையாது. அதற்கு அனுமதியும் தரப்படவில்லை. அட, பிளாக்பெர்ரியாவது கொடுங்கப்பா என்று கடுமையாக போராடித்தான் இதைப் பெற்றாராம் ஒபாமா.

எப்பயாச்சும் !

எப்பயாச்சும் !

பணியிலிருந்து சற்று ஓய்வாக இருக்கும்போதும், காரில் பயணிக்கும்போதும்தான் பெரும்பாலும் செல்போனை பார்ப்பாராம் ஒபாமா.

அதிபராக இருந்தாலும்.. அவரும் சாதாரண மனிதர்தானே.. எஸ்.எம்.எஸ் பார்க்கவும், அனுப்பவும் ஆசை இருக்காதா என்ன...!

English summary
US President Barack Obama admitted on Wednesday he was not allowed to have an iPhone owing to security fears -- explaining why he is sometimes seen with a bulky super secure Blackberry. "I'm not allowed for security reasons to have an iPhone," Obama told a group of young people at the White House for an event promoting his health care law. He added that his daughters Sasha and Malia spend a lot of time on their iPhones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X