2026ல் இந்தியா துண்டு துண்டாகும்! அதுவும் மோடி ஆட்சியிலேயே.. சத்தியம் செய்த பாகிஸ்தான் மாஜி எம்பி
இஸ்லாமாபாத்: லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு 2024 நவம்பர் மாதம் இந்தியா துண்டு துண்டாக உடையும். இது சத்தியம் என பாகிஸ்தானின் முன்னாள் செனட்டர் பைசல் அபிடி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் சென்ட்டர் பைசல் அபிடி. இவர் இந்தியா மீது வன்மத்துடன் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கூறி சர்ச்சையை கிளப்புவார். அந்த வகையில் இப்போது பைசல் அபிடி சொல்லி இருக்கும் கருத்து ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது.

அதாவது பைசல் அபிடி ஜி டிவிக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில், ‛‛இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தின் போது கூறப்படும் 'இந்துத்துவா' கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் உள்ள ஆதரவு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பைசல் அபிடி பதிலளித்தபோது தான் சர்ச்சையை கிளப்பினார். இதுதொடர்பாக பைசல் அபிடி கூறியதாவது: இந்தியா தனது நாடாளுமன்றத்தில் ‛அகண்ட பாரதம்' என்ற பெயரில் சுவரோவியம் வைத்தது. இதனால் நேபாளம், இலங்கை, பூடான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தற்போது கோபமடைந்துள்ளன. பாகிஸ்தான் அதுபற்றி பேசியபோது மக்கள் எங்களை கேலி செய்தனர். ஆனால் அது இப்போது உண்மையாக மாறி உள்ளது. அகண்ட பாரதம் கொள்கையுடன் பாஜக செயல்கிறது.

அல்லாவின் ஆண்டான 2026ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதிக்குள் இந்தியா சிதைந்துவிடும். இந்தியா துண்டு துண்டாக உடையும் என உறுதியளிக்கிறேன். இதற்கான தொடக்கம் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தெரிகிறது. இந்துத்துவா என்ற கொள்கையில் மக்கள் இந்தியாவை விட்டு கூட வெளியேற்றப்படலாம். இது ஏஜென்சிகள் மூலம் நடக்காலம்.
மேலும் இந்தியா என்பது மோடி அதிகாரத்தில் இருக்கும்போதே அழிக்கப்பட வேண்டும். அது மிகவும் முக்கியமானது'' எனக்கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கு இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"...Allah will break India(Bharat Mata) into pieces..."
— Pakistan Untold (@pakistan_untold) May 3, 2024
- Ex-senator Pakistan pic.twitter.com/jg4O4fJsUK
இதற்கு ஒருவர், ‛‛இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் வெடிபொருட்களையும், நாசக்கார வேலைக்கான ஆட்களையும் தயாராக வைத்துள்ளனர் என்பது தான்'' என தெரிவித்துள்ளார். இன்னொருவரோ, ‛‛உங்களின் நாடு மீது கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் உங்கள் நாடு ஏழையானதாக மாறிவிட்டது. இந்தியாவை பற்றி கவலைப்பட வேண்டாம். இந்தியா என்பது தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளும். உங்கள் நாட்டை முதலில் பாதுகாக்கும்படி அல்லாவிடம் கூறுங்கள்'' என கூறியுள்ளார்.
மற்றொருவரோ, ‛‛இவர் தவறாக கூறிவிட்டார் என நினைக்கிறேன். அதாவது பாகிஸ்தான் துண்டு துண்டாகிவிடும் என்பதற்கு பதில் இந்தியா என சொல்லிவிட்டார்'' என கிண்டல் செய்துள்ளார். இப்படி தொடர்ந்து அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications