காஷ்மீர் பிரச்சனையை பேசலாம்.. இந்தியாவிடம் அடிபணிந்த பாகிஸ்தான்.. கெஞ்சும் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்
தெஹ்ரான்: இந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க விரும்புகிறோம். காஷ்மீர் விவகாரம், தண்ணீர் பங்கீடு உள்பட அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருக்கிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பற்றியும் பேச ரெடியாக இருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு வாங்க என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் நம் நாட்டிடம் மீண்டும் கெஞ்ச தொடங்கி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு நம் நாடும் பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் கடந் 7ம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. மேலும் முக்கிய விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
கடந்த 10ம் தேதி வரை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலில் நிலைக்குலைந்து போன பாகிஸ்தான், நம் நாட்டிடம் போர் நிறுத்தம் செய்ய கெஞ்சியது. இதையடுத்து இருநாடுகள் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் நம் நாட்டுன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறினார். மேலும் சவுதி அரேபியாவில் வைத்து இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் விரும்பினார்.
இருப்பினும் நம் நாடு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் ஷெபாஷ் ஷெரீப் நம் நாட்டை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருகிறார். இந்நிலையில் தான் துருக்கி, ஈரான் உள்பட 4 நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். நம் நாட்டுடனான மோதல் முடிவுக்கு வந்த நிலையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
துருக்கியை தொடர்ந்து ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் சென்றார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர், ‛‛ இந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க விரும்புகிறோம். காஷ்மீர் விவகாரம், தண்ணீர் பங்கீடு உள்பட அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருக்கிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பற்றியும் பேச ரெடியாக இருக்கிறோம்'' என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
அதேபோல் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷெபாஷ் ஷெரீப், ‛‛இந்தியா போருக்கான வழியை தேடி ஆக்ரோஷத்தை காட்டினால் நாங்களும் எங்கள் நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுப்போம். சில நாட்களுக்கு முன்பு போல் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். அதேவேளையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டால் நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை இந்தியாவுக்கு உறுதியாக காட்டுவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications