"வெறும் 30 நிமிடம்.. ஊரே மொத்தமாக அழியும்.." மயான அமைதிக்கு பின் உள்ள கொடூரம்.. பார்த்தாலே மிரளுதே
ரிகியவிக்: ஐஸ்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஊரில் வெறும் சில மீட்டர் அடியில் எரிமலை பிழம்பு இருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற சூழலே இருக்கிறது.
இந்த உலகம் எப்போதும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கும் பகுதிகள் எப்போதும் அதேபோல இருந்தது இல்லை. உதாரணத்திற்கு இன்று பாலைவனமாக இருக்கும் சகாரா பாலைவனம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலாக இருந்து.

அப்பகுதியில் காலப்போக்கில் புவியியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், அது இப்போது பாலைவன நிலப்பரப்பாக மாறியது. இதுபோல உலகில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
ஐஸ்லாந்து கிராமம்: அப்படியொரு சம்பவம் தான் ஐஸ்லாந்தில் நடக்கிறது. ஆனால், இது மனிதர்களுக்கு மிக பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. தான் ஐஸ்லாந்தில் உள்ள கிரண்டாவிக், இந்த நகரை எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்த சின்ன ஊரில் மொத்தமே 3,000 பேர் தான் வசூலிக்கிறார்கள்.
கடந்த மாதம் வரை இந்த கிராமத்தில் மக்கள் வழக்கம் போலவே வாழ்ந்து வந்தனர். இருப்பினும், அங்கே கடந்த வாரம் திடீரென ஒரு மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக மினி பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படி சுமார் 1000க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் அங்கே ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 3.9 மற்றும் 4.5 ரிக்டரில் இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு சில மணி நேரத்தில் பல ஆயிரம் மினி நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
பொதுமக்கள் அச்சம்: இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கே இப்போது என்ன சூழல் நிலவுகிறது என்பதை ஐஸ்லாந்து வானிலை மையம் கூர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நில அதிர்வு காரணமாக இந்த கிராமத்தில் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கிறது. அங்குள்ள பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள பல சாலைகள் அப்படியே இரண்டாகப் பிளந்துள்ளன. தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் சில சமயம் நிலநடுக்கம் வலிமையாகவும் இருந்ததாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அங்கே நிலத்திற்கு அடியில் மாக்மா (magma) எனப்படும் நெருப்பு குழம்பு குவிந்து வருவதை அந்நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, அங்கே எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிப்பு ஏற்படும் என்ற சூழலே நிலவுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கிரண்டாவிக் வடக்கே நான்கு கிமீ தொலைவில் அமைந்துள்ள ஸ்வார்ட்செங்கி மின்நிலையத்தைச் சுற்றித் தற்காப்புச் சுவர்களைக் கட்டும் பணியை ஐஸ்லாந்து அரசு ஆரம்பித்துள்ளது.
வெறும் 30 நிமிடம்: அதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனால் இந்த மின்சார நிலையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஐஸ்லாந்து அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பகுதிக்கு கீழே மாக்மா எனப்படும் நெருப்பு பிழம்பை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 1 கிலோமீட்டருக்குள் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதுபோன்ற ஒரு சூழல் இருந்தால் அங்கே எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
எனவே, இங்கே எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். நெருப்பு குழம்பு மிக அருகில் இருப்பதால், எரிமலை வெடிப்பு ஏற்படும் போது நமக்கு 30 நிமிடம் கூட இருக்காது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
முதலில் பல ஆயிரம் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட இப்போது ஏற்படும் மினி பூகம்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், அங்கே கடுமையான புயல் நிலவி வருவதால் மினி நிலநடுக்கத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்றும் மினி நிலநடுக்கங்கள் உண்மையாகவே குறைந்துள்ளதா என்பதை நாம் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications