Imran Khan: "பாகிஸ்தான் ராணுவம் என்னை கொன்றுவிடும்.." முன்பே எச்சரித்த இம்ரான் கான்.. உச்சக்கட்ட பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே தனது உயிருக்கு என்ன நடந்தாலும் அதற்குப் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் தான் பொறுப்பு என இம்ரான் கான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பாகிஸ்தானின் மாஜி பிரதமரான இம்ரான் கான் ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவி வருகிறது. சிறையில் வைத்து அவர் கொல்லப்பட்டதாகவும் கூறி வருகிறார்கள். இதனால் பாகிஸ்தானில் ஒரு குழப்பமான சூழலே இருக்கிறது. இதற்கிடையே இம்ரான் கானின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இம்ரான் கான்
பிரதமர் பதவியை இழந்து ஓராண்டு கழித்து, 2024ல் பிரிட்டன் செய்தி நிறுவனமான தி டெலிகிராஃப் நிறுவனத்திற்கு இம்ரான் கான் இந்த பேட்டியை அளித்திருந்தார். அதில் அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகக் குற்றஞ்சாட்டினார். தனது கட்சியை அழிக்க அனைத்து தந்திரங்களையும் முனீர் பயன்படுத்துவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் முனீர் தான் பொறுப்பு என்றும் அடிமைத்தனத்தை விட மரணத்தையே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொன்றுவிடும்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பாகிஸ்தான் ராணும் எனக்கு எதிராக எல்லா விஷயங்களையும் செய்கிறார்கள். இப்போது அவர்கள் செய்யக்கூடியது என்னைக் கொலை செய்வது மட்டுமே. எனக்கோ என் மனைவிக்கோ ஏதாவது நடந்தால், ஜெனரல் அசிம் முனீர் தான் முழு பொறுப்பு.. இதை நான் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளேன். ஆனாலும் எனக்குப் பயம் இல்லை. அடிமைத்தனத்தை விட மரணத்தையே விரும்புவேன்" என்று அவர் தெரிவித்தார்.
கடிம்
இஸ்லாமாபாத் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவி நிலையில், அவரது இந்த பழைய பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையை விடுவிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், "கடந்த ஆறு வாரங்களாக, இம்ரான் கானை முழு தனிமை சிறையில் அடைத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், அவரது சகோதரிகளைக் கூட சந்திக்க அனுமதிக்கவில்லை..
மகன் குற்றச்சாட்டு
செல்போன் அழைப்புகள், மீட்டிங் என எதற்கும் அனுமதி தரவில்லை.. அவரது உடல்நிலை குறித்து எந்தவொரு செய்தியும் இல்லை. என் சகோதரனும் நானும் எந்த வகையிலும் எங்கள் தந்தையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்தவொரு சட்டத்தையும் மதிக்காமல் இம்ரான் கானை சிறையில் அடைத்துள்ளனர். திட்டமிட்டே எனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல்களைச் சொல்லாமல் மறைத்து வருகிறார்கள். எனது தந்தையை இதுபோல நடத்தும் பாகிஸ்தான் அரசு நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி தனிமை சிறையில் இருந்து தந்தையை வெளியே கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது தந்தை உயிருடன் இருக்கிறார் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அமைப்புகள் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
-
வடகொரியாவில் 99.93% வாக்குகள் கிம் கட்சிக்கு தான்! அப்போ மீதி 0.07% வாக்கு யாருக்கு போச்சு தெரியுமா -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications