இஸ்ரேல் மட்டும் தாக்கினால்.. மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்.. ஜாக்கிரதை.. ஈரான் விடுத்த எச்சரிக்கை
டெஹ்ரான்: கடந்த அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேலில் ஏறக்குறைய 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் நாட்டை தாக்கினால்.. பதிலுக்கு "தீர்க்கமான மற்றும் அதிர்ச்சி அளிக்கும்" பதிலடியை அளிப்போம் என்று ஈரான் எச்சரித்து உள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரஸிடம் இது பற்றி எச்சரித்து உள்ளார்.

ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் "விரைவில் பதிலடி கொடுக்கும்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant கடந்த வாரம் கூறினார். இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் துல்லியமான மற்றும் கொடியதாக இருக்கும் என்று உறுதியளித்தார்.
இஸ்ரேல் திட்டம்: கடந்த அக்டோபர் 1 ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் ஏற்கனவே ஈரானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை இஸ்ரேல் மார்க் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாஹ்வின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று இஸ்ரேல் அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்.. ஈரானை எப்படி தாக்க வேண்டும்.. எங்கே தாக்க வேண்டும்.. என்று பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த வாரம், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தியது. அதில் ஈரானுக்கு பதிலடி தருவது குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் இஸ்ரேல் இறுதி முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேல் நாட்டு பிரதமருக்கும் - பாதுகாப்பு துறைக்கும் இந்த விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கவோ அல்லது உயர்மட்ட தலைவர்களை அகற்றவோ வாய்ப்பில்லை. அதாவது ஈரான் எதிர்பார்த்த இடங்களில் இஸ்ரேல் தாக்காது. ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத இடங்களில் இஸ்ரேல் தாக்கும் என்கிறார்கள்.
எச்சரிக்கை: ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டின் பதிலடி மோசமாகவும் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேலை ஈரான் தாக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் இருக்கும். என்ன, எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது என்று கூறி உள்ளார். அக்டோபர் 1ம் தேதி தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் நாட்டை தாக்கினால்.. பதிலுக்கு "தீர்க்கமான மற்றும் அதிர்ச்சி அளிக்கும்" பதிலடியை அளிப்போம் என்று ஈரான் எச்சரித்து உள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரஸிடம் இது பற்றி எச்சரித்து உள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications