"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை
இஸ்லாமாபாத்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானை எடுத்து கொண்டால் ஷியா இஸ்லாமியாக நாடாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஷியா நாடாக ஈரான் உள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவக்கும் மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி அங்கேயே சென்று விடலாம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியான அசீம் முனீர் பேசியிருப்பது ஷியா - சன்னி இஸ்லாமிய பிரச்சனையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இந்த போர் 4வது வாரத்தை தொட்டுள்ளது. மத்திய கிழக்கில் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இருந்தாலும் கூட பலவும் அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது.

குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், ஓமன் உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பதோடு ஈரானுடன் பெரிய அளவில் நட்பு பாராட்டுவது கிடையாது.
ஷியா - சன்னி இஸ்லாமியர்கள்
பாகிஸ்தான், ஈரானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டாலும் கூட நெருக்கமான உறவில் இருப்பது இல்லை. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது இஸ்லாமியர்களை எடுத்து கொண்டால் ஷியா, சன்னி என 2 பிரிவினர் உள்ளனர்.
இதில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களில் பெரும்பான்மையாக சன்னி பிரிவினர் உள்ளனர். மொத்த இஸ்லாமியர்களில் சுமார் 85 சதவீதம் பேர் சன்னி பிரிவினராகவே உள்ளனர். இவர்கள் சவுதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்பட பிற முஸ்லிம் நாடுகளில் வசித்து வருகின்றனர்.
ஷியா நாடாக ஈரான்
மீதமுள்ள 15 சதவீதம் பேர் தான் ஷியா இஸ்லாமியர்கள். அதில் அதிகமானவர்கள் ஈரானில் தான் உள்ளனர். பிற நாடுகளில் குறைவான அளவில் தான் ஷியா இஸ்லாமியர்கள் உள்ளனர்.
இதனால் தான் ஈரான் ஷியா இஸ்லாமிய நாடாக உள்ளனர். இந்த உட்பிரிவு கூட ஈரானை பிற இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து தனித்து வைக்க முக்கிய காரணமாக உள்ளது.
பாகிஸ்தானில் இருபிரிவினர்
இதனால் ஒவ்வொரு நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் ஈரானுக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் ஈரானுக்கு எதிராகவும் உள்ளனர். இதற்கு பாகிஸ்தானும் விதிவிலக்கல்ல. அங்குள்ள ஒரு தரப்பினர் ஈரானுக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் எதிராகவும் உள்ளனர்.
இந்நிலையில் தான் ரம்ஜானை முன்னிட்டு பாகிஸ்தானில் நடந்த இஃப்தார் விருந்தில் அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் பங்கேற்றார். அப்போது ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போர் பற்றி மதஅறிஞர்களுடன் விவாதம் நடந்தது.
அசீம் முனீர் சர்ச்சை
அப்போது ஷியா மத தலைவர்களைப பார்த்து அசீம் முனீர், ''ஈரான் மீது உங்களுக்கு அவ்வளவு பிரியம் இருந்தால், அங்கேயே சென்று விடுங்கள். ஏனென்றால் வெளிநாட்டிற்கு விசுவாசம் காட்டி பாகிஸ்தானுக்குள் பிளவையோ, குழப்பத்தை ஏற்படுத்தவோ யாரையும் அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.
ஏற்கனவே பாகிஸ்தானில் பெரும்பான்மையாக உள்ள சன்னி மற்றும் குறைந்த அளவில் உள்ள ஷியா இஸ்லாமியர்கள் இடையே பிரச்சனை உள்ளது. இதனால் அசீம் முனீரின் இந்த பேச்சு பாகிஸ்தானில் இருந்து ஷியா இஸ்லாமியர்கள் விரட்டப்பட உள்ளனரா? என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஷியா மக்கள் கடும் எதிர்ப்பு
அதோடு அசீம் முனீரின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. அசீம் முனீரின் இந்த பேச்சு ஷியா பிரிவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஒரு இஃப்தார் விருந்தில் தெரிவித்த கருத்துக்கள் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளன. இது ஷியா மத தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது அசீம் முனீரின் ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிரான மனப்பான்மையை பிரதிபலிப்பதாக ஷியா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் ஷியா மக்கள் தங்களின் விசுவாசத்தை பாகிஸ்தானுக்கு தான் காட்டி வருகின்றனர். பாகிஸ்தான் தனிநாடாக உருவானதில் ஷியா மக்களின் பங்கு உள்ளது. அசீம் முனீரின் இந்த பேச்சு நாட்டில் வெறுப்புணர்வை உருவாக்கும். சமூக நல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும். எங்களின் தேசபக்தியைச் சந்தேகிப்பது தவறானது என அசீம் முனீரை 'அட்டாக்' செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications