நாளை ஷார்ஜாவில் நடக்கும் அமீரக வாழ் தோப்புத்துறைக்காரர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாய் தோப்புத்துறை முஸ்லீம் சங்கம் அமீரகத்தில் வசிக்கும் தோப்புத்துறை நபர்களுக்காக நாளை கிராண்ட் எக்செல்சியர் ஹோட்டலில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
துபாய் தோப்புத்துறை முஸ்லீம் சங்கம் அமீரக வாழ் தோப்புத்துறை நபர்களுக்காக நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி ஷார்ஜாவில் உள்ள கிராண்ட் எக்செல்சியர் ஹோட்டலில் நாளை மாலை நடைபெறுகிறது. துபாயில் இருந்து ஷார்ஜாவுக்கு சென்று வர போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

ஷார்ஜா செல்லும் பேருந்துகள் நாளை மாலை 4.30 மணிக்கு துபாய் ஈத்கா மைதானத்தில் இருந்து புறப்படும். நிகழ்ச்சி முடிந்த பிறகு வாகனங்கள் மீண்டும் துபாய் வந்தடையும்.
மாலை 5 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் அரேபியன் ஹோல்டிங் நிறுவன இயக்குனரும், ஈமான் தலைவருமான ஹாஜி பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் கான், துபாயில் உள்ள ஆலியா முகமது டிரேடிங் நிறுவன இயக்குனர் ஹாஜி எம். ஷேக் தாவூது மரைக்காயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

மேலும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தோப்புத்துறைக்காரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு சங்க உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications