துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நிர்வாகக் குழுவினருக்கு வரவேற்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நிர்வாகக் குழுவினருக்கு 28.11.2016 திங்கட்கிழமை மாலை அன்னபூர்ணா உணவகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப்பணிகள் குறித்து விவரித்தார். இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் ஒன்று அமீரகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் தாளாளர் வி.எம். ஜபருல்லா கான் அவர்களுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
ஏற்புரை நிகழ்த்திய ஜபருல்லா கான், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி கடந்த 1970-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. வரும் 2020-ஆம் ஆண்டில் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்த விழா சிறப்புடன் நடைபெற தேவையான ஆதரவினை அளிக்க கேட்டுக் கொண்டார். மேலும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜெ.அபுபக்கர் சித்திக், ஏ.எஸ். நசீர் கான், முதல்வர் திருமங்கலம் முனைவர் அப்பாஸ் மந்திரி, பேராசிரியர்கள் நாகர்கோவில் முனைவர் இப்ராஹிம், முதுகுளத்தூர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
ஈமான் அமைப்பின் சார்பில் பொருளாளர் உபூர் காக்கா, ஆடிட்டர் நாகூர் ரவூப் அலி, பொதுச்செயலாளர் கீழை ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், செயலாளர்கள் முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால் முகைதீன், கள்ளக்குறிச்சி காதர் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளையான்குடி அபுதாஹிர், அதிராம்பட்டினம் நூருல் ஹக் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications