"பூமியை தாக்கும் பேரழிவு!" திடீரென சரிந்த பிரமிடுகள்.. எச்சரிக்கும் உள்ளூர் பழங்குடியின மக்கள்! ஷாக்
மெக்சிகோ சிட்டி: லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் பழங்கால பிரமிடு திடீரென இடிந்துள்ளன. கனமழையால் பிரமிடுகள் திடீரென இடிந்துள்ள நிலையில், அவை விரைவில் நடக்கப் போகும் அழிவுக்கான எச்சரிக்கை என அங்குள்ள பழங்குடியினர் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மெக்சிகோ அரசும் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது.
பொதுவாகப் பிரமிடுகள் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது எகிப்து தான். அங்கே உள்ள மிகப் பெரிய பிரமிடுகளை பார்த்தாலே வியப்பாக இருக்கும்.

ஆனால், எகிப்தைத் தாண்டியும் வேறு சில நாடுகளில் பிரமிடுகள் உள்ளன. அதுபோலத் தான் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவிலும் சில பிரமிடுகள் உள்ளன.
பிரமிடுகள்: இதற்கிடையே அங்குள்ள இரண்டு பிரமிடுகளில் ஒன்று திடீரென இடிந்துள்ளன. இந்த இரு பிரமிடுகளை அங்குள்ள உள்ளூர் மக்கள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதி வந்தனர்.. இந்த பிரமிடுகள் இப்போது திடீரென இடிந்துள்ள நிலையில், அவை விரைவில் நடக்கப் போகும் அழிவைக் குறிக்கும் வகையில் இருப்பதாகவும், இதை இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிகுறி என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அங்கே சமீபத்தில் மிகப் பெரிய புயல் ஏற்பட்டது. அதில் தான் இந்த இரட்டை பிரமிடுகளில் ஒன்று அழிந்தது. இதற்கிடையே மிகப் பெரிய இயற்கை பேரழிவு ஏற்படுவதற்கான அறிகுறிதான் இது என அந்த பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஜூலை 30ம் தேதி பெய்த கனமழையால் பிரமிட்டின் ஒரு பகுதி இடிந்துள்ளது. இது குறித்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பேரழிவைத் தரும்: அங்கிருந்த அஸ்டெக் இன மக்களை வீழ்த்திய புரேபெச்சா பழங்குடியினரால் இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. பண்டைய புரேபெச்சா பழங்குடியினர் வழிபடும் குரிக்வேரிக்கு நரபலி தர இந்த பிரமிடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். யக்காத பிரமிடுகள் என்று அழைக்கப்படும் இவை மைக்கோகன் மாகாணத்தில் காணப்படுகிறது. இந்த பிரமிடுகள் இப்போது தேசமடைந்துள்ள நிலையில், இவை அடுத்து ஏற்படப் போகும் இயற்கை பேரழிவையே குறிப்பதாகப் பழங்குடியினர் எச்சரிக்கிறார்கள்.
வரலாறு: இந்த இடத்தில் முதலில் அஸ்டெக் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை வீழ்த்திய புரேபெச்சா பழங்குடியினர் சுமார் 400 ஆண்டுகளுக்கு இந்த பகுதியை ஆட்சி செய்தனர். அந்தக் காலகட்டத்தில் தான் இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து 1519இல் ஸ்பெயின் படையினர் இந்த இடத்தை ஆக்கிரமித்தனர். ஸ்பெயின் படை இங்கு வருவதற்கு முன்பும் இந்த பிரமிடுகள் இதேபோல இடிந்தன. எனவே, அதைக் குறிப்பிடும் இங்குள்ள பழங்குடியினர் மீண்டும் ஒரு மிக மோசமான பாதிப்பு ஏற்படப் போவதையே இது குறிப்பதாகக் கூறுகின்றனர்.
இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ்.. 2025ல் இந்தியாவில் என்ன நடக்கும் என கணிப்பு! தமிழகத்திற்கும் அலர்ட்
மெக்சிகோ அரசு சொல்வது என்ன: இது தொடர்பாக மெக்சிகோ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தொல்லியல் மண்டலத்தில் அமைந்த பிரமிடுகளில் ஒன்றின் முகப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புரேபெச்சா பகுதியில் திடீரென ஏற்பட்ட மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு இங்கு நிலவிய கடும் வறட்சியால் பிரமிடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் மழையின் போது தண்ணீர் பிரமிடுகளில் நுழைந்தன. இதன் காரணமாகவே பிரமிடுகள் இடிந்தன.
பிரமிடுகளின் தெற்கு தளத்தின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் அதன் மையப்பகுதியில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் எந்த பகுதிகள் சேதமடைந்துள்ளன என்பதை ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதியை மீட்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் பிரமிடுகளின் கட்டமைப்பை முழுமையாகச் சரிசெய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications