Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இம்ரான் கான் பார்வை கிட்டத்தட்ட முழுமையாக பறிபோனது.. பாகிஸ்தான் மாஜி பிரதமரின் கதியை பாருங்க

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் உடல்நிலை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் இம்ரான் கானுக்கு ஒரு கண்ணில் கிட்டத்தட்ட 85% பார்வை பறிபோய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மிகுந்த குழப்பத்திலும் மன உளைச்சலிலும் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். ஒரு கட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் இவருக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றதால் இவர் தனது பதவியை இழந்தார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஷெரீப் அரசு இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது.

Imran Khan Health Pakistan Ex PM Loses 85 Vision After Pakistan Prison Abuse Shocking details

இம்ரான் கான் உடல்நிலை

இம்ரான் கான் மீது சுமார் 180 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் அரசு பொறுப்பில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது முதல் அவர் சிறையிலேயே இருந்து வருகிறார். நடுவில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவின. சிறைக் காவலர்கள் தாக்கியதால் அவர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே இம்ரான் கான் கண் பார்வை கிட்டத்தட்ட பறிபோய் விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடுமையான கண் பார்வை இழப்பு, மோசமான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரி சல்மான் சஃப்தார் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்த தகவல்களைப் பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி வெளியிட்டுள்ளது.

பார்வை பறிபோனது

அதில் இம்ரான் கான் தனது உடல்நிலை பாதிப்புகள் குறித்து சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், சிறை அதிகாரிகள் மருத்துவப் புகார்களை அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால் இம்ரான் கான் உடல்நிலை மோசமடைந்துள்ளது. வலது கண்ணில் அவரது பார்வை கிட்டத்தட்ட 85% பறிபோய்விட்டது. உரிய மருத்துவப் பராமரிப்பின்றி, குடும்பத்தினரையோ, சட்ட ஆலோசகரையோ சந்திக்கத் தடை செய்யப்பட்டுள்ளார்.

என்ன நடந்தது

அந்த ரிப்போர்ட்டில், "சுமார் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு வரை, அவரது பார்வை இயல்பாகவே இருந்துள்ளது. அதன் பிறகு பார்வையில் குறைபாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இது குறித்து அப்போதைய சிறைக் கண்காணிப்பாளரிடம் பலமுறை புகாரளித்தும், சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அலட்சியம் அவரது உடல்நிலையை மிக மோசமாகப் பாதித்தது. இதனால் அவரது வலது கண்ணில் முழுமையான பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகே கண் மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டுள்ளது. ரத்த உறைவால் கடுமையான சேதம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அப்போது ஓரளவுக்கு மட்டுமே சிகிச்சை தரப்பட்டது. இப்போது அவருக்கு வலது கண்ணில் 15 சதவீதம் மட்டுமே பார்வை எஞ்சியுள்ளது. கண் பார்வை இழப்பு மற்றும் உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்காததால் அவர் குழப்பமடைந்து, மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அவரது கண்களில் தொடர்ந்து நீர் வடிந்து கொண்டே இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைச் சிறை

இம்ரான் கான் அக்டோபர் 2023இல் இந்த அடியலா சிறைக்கு மாற்றப்பட்டது. அப்போது முதலே சுமார் 2 ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார். இதுவும் அவரை மன ரீதியாகப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதான இம்ரான் கான், பல உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டாலும் அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அல்லது பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் கோரிக்கைகள் விடுத்த போதிலும், அடிப்படை சிகிச்சை கூட அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+