பாகிஸ்தானில் முடிவுக்கு வந்த இம்ரான் கான் ஆட்சி... நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான் கானின் தெஹ்ரிக் கட்சி குறைவான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது.
Recommended Video
பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த ஞாயிறு அன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது.

முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானோ கடைசி பந்து வரை நின்று ஆடுவேன் என தெரிவித்தார். தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார். ஆனால் இதை சமாளிக்க தன்னிடம் மேலும் ஒரு திட்டம் உள்ளதாக கூறினார் இம்ரான் கான்.
இந்த நிலையில் ஞாயிறு அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பவாத் உசேன், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை ஏற்ற பாகிஸ்தான் துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம்
இதன் பின்னர் பேசிய இம்ரான் கான், "அந்நிய சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஊழல்வாதிகள் நாட்டை ஆளக்கூடாது. நான் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பாகிஸ்தானில் அரசை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளேன்." என்றார்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்ததுடன் இம்ரான் கானே காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் 90 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பளித்தது. மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

நாடாளுமன்றத்துக்கு வராத இம்ரான் கான்
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (ஏப்ரல் 9) நம்பிக்கையில்லா தீர்மானத்துக்காக கூடியது. அப்போது பாகிஸ்தான் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். அதே நேரம் பிரதமர் இம்ரான் கான் மற்றம் தெஹ்ரிக் கட்சி எம்.பிக்கள் பலரும் அவைக்கு வரவில்லை. இதனால் 3 மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. 4:30 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் இம்ரான் கான் கலந்துகொள்ளவில்லை.

நீடித்த இழுபறி
அளும் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் எனில், அதன் பலத்தில் கால் பங்கு உறுப்பினர்கள் அவைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அவைக்கு வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாமதப்படுத்தவே ஆளும் கட்சி எம்.பிக்கள் வரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டன.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி
இந்த நிலையில், இம்ரான் கான் கேபினட் அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நள்ளிரவு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 174 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் சபாநாயகர் பொறுப்பிலிருந்து அசாத் கெய்சர் ராஜினாமா செய்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications