Imran Khan: இம்ரான் கான் மரணம்? பாகிஸ்தானில் பெரும் குழப்பம்! சிறை வாசலிலேயே உச்சக்கட்ட பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்திகள் பரவி வரும் நிலையில், அவரது 3 சகோதரிகளும் சிறை நிர்வாகத்தின் மீது சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இம்ரான் கானை நேரில் சந்திக்க இரு வாரங்களாக தங்களை அனுமதிக்கவில்லை என்றும் அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் போலீசார் சாடியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் பிடிஐ எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை நடத்தி வருபவர் இம்ரான் கான். இவர் 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். அப்போது கூட்டணிக் கட்சிகள் அவருக்கு எதிராகத் திரும்பியதால் இம்ரான் கான் ஆட்சியை இழந்தார். இருப்பினும், இதற்குப் பின்னால் வெளிநாட்டுச் சதி இருப்பதாக அவர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.

இம்ரான் கான்
பிரதமர் பதவியை இழந்த பிறகு இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் 2023 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது முதலே இம்ரான் கான் தொடர்ச்சியாகச் சிறையிலேயே இருந்து வருகிறார். இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் குறித்து நேற்று சில பகீர் தகவல்கள் பரவின.
அதாவது இம்ரான் கான் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. சிறையிலேயே வைத்து அவர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இது தொடர்பாக சில போட்டோக்களும் வெளியானதால் பாகிஸ்தானில் குழப்பம் நிலவியது. நேற்று பிற்பகல் முதலே சமூக வலைத்தளங்களில் இந்த தகவல்கள் தீயாகப் பரவியது. அதேநேரம் பாகிஸ்தான் அரசு அல்லது சிறை நிர்வாகம் இதுவரை எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாகப் பகிரவில்லை.
அடிதடி
இதற்கிடையே இம்ரான் கானை சந்திக்கப் போன அவரது 3 சகோதரிகள்- நூரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோரையும் போலீசார் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க அனுமதி கோரி இம்ரான் கான் சகோதரிகள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அப்போது போலீசார் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குற்றச்சாட்டு
இது தொடர்பாகப் பாகிஸ்தான் போலீசாருக்கு இம்ரான் கான் சகோதரிகள் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அதில், "இந்த வன்முறை திட்டமிட்டது.. எந்தத் தூண்டுதலும் இல்லாமல் காவல்துறை எங்களை அடித்து துன்புறுத்தியது. நாங்கள் இம்ரான் கான் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள அமைதியான முறையில் போராடினோம். சாலைகளைக் கூட மறிக்கவில்லை. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு செய்யவில்லை, எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
ஆனால் எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல், அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. அதன் பிறகுதான் (பாகிஸ்தான்) பஞ்சாப் காவல்துறை எங்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது.. எங்கள் முடியை பிடித்து இழுத்து, கீழே தள்ளி, சாலையில் இழுத்துச் சென்றனர். இதில் மோசமான காயங்கள் ஏற்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் எங்கே
இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள் நிலையில், கடந்த ஒரு மாதமாகவே அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இம்ரான் கான் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. வழக்கறிஞர்களைச் சந்திக்கக் கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லையாம். பாகிஸ்தானில் காட்டுமிராண்டித்தனம் தலைதூக்கியுள்ளதாகவும் அடிப்படை உரிமை நசுக்கப்படுவதாகவும் இம்ரான் கான் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
இம்ரான் கான் மரணமடைந்துவிட்டதாக நேற்று முதலே செய்திகள் உலா வரும் நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. இம்ரான் கான் எங்கு இருக்கிறார் என்ற கேள்வியையும் அங்கு நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications