கட்சி மாறிய துணை சபாநாயகர்! துவைத்து எடுத்த எம்பிக்கள்! பாகிஸ்தானில் இம்ரான் கான் எம்பிகள் அடாவடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பாக். பஞ்சாபில் துணை சபாநாயகர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் மோசமடைந்து வந்த நிலையில், இம்ரான் கான் அரசால் அதை மீட்க முடியவில்லை.
இதையடுத்து கடந்த வாரம் இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.

இம்ரான் கான்
அந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல கூட்டணிக் கட்சிகளும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பினர். இதனால், பாகிஸ்தான் அரசியலில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இம்ரான் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து செபாஷ் செரீப் அந்நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிதடி
இந்நிலையில், இன்று பாகிஸ்தான் பஞ்சாப் சட்டசபை கூடியது. அப்போது இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் எம்பிகள் துணைச் சபாநாயகர் தோஸ்த் முஹம்மது மஜாரியை தாக்கி உள்ளனர். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றம் கூடிய போது, துணைச் சபாநாயகரை இம்ரான் கான் கட்சியினர் அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவர்கள் மசாரியை தாக்கி, தலைமுடியையும் இழுத்துத் தாக்கி உள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் அவை காவலர்கள் அவரை துணைச் சபாநாயகரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் முன்பு, இம்ரான் கான் கட்சியினர் அவரை தாக்கும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி மாறினார்
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இம்ரான் கான் கட்சியின் முஹம்மது மஜாரி துணைச் சபாநாயகராக இருந்தார். இருப்பினும், அரசியல் குழப்பம் அதிகரித்த பின்னர், மஜாரி இம்ரான் கான் அரசுக்கு எதிராக திரும்பினார். அதேபோல மேலும் 24 எம்பிகளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராகத் திரும்பினர். இதனால் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் ஆட்சியை இழந்தது.
Recommended Video

அடிதடி
இதையடுத்து இப்போது இம்ரான் கான் மற்றும் செபாஷ் செரீப் கட்சிகளில் இருந்து இருவர் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்ப்படுதிறது. பாகிஸ்தான் பஞ்சாபில் மொத்தம் 24 எம்பிகள் அவருக்கு எதிராகத் திரும்பி உள்ள நிலையில், அவர்களும் சபையில் வாக்களிக்கக் கூடாது என்று இம்ரான் கான் கட்சியினர் தாக்கி உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications