தாய்மையை தாழ்த்துகிறது பெண்ணியம்.. இம்ரான் கான் சர்ச்சை டிவீட்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பெண்ணியம் தாய்மையின் பாத்திரத்தை தாழ்த்துகிறது என சர்ச்சை ட்விட் செய்துள்ளார்.
சென்னை: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அந்நாட்டின் அரசியல்வாதியுமான இம்ரான்கான், பெண்ணியம் தாய்மையின் பாத்திரத்தை தரம் தாழ்த்துகிறது என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இம்ரான் கான் போட்டுள்ள டிவீட்டில், தாய் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர். ஒரு உண்மையான அம்மா அப்படித்தான் இருபார்கள். இந்த பெண்ணிய இயக்கம் என்ற மேற்கத்திய கருத்துகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். அது தாயின் பாத்திரத்தை தரம் தாழ்த்துகிறது. நான் வளர்ந்தபோது எனது அம்மா என்னில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் இம்ரான்.

இம்ரான் கானின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் கருத்து குறித்து ஐமென் புகா என்பவர் தனது ட்விட்டரில் "பெண்ணியவாதிகள் தாயின் பாத்திரத்தை தரம் தாழ்த்துவதில்லை. அவர்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் அம்மாவின் உரிமையைப் பேசுகிறார்கள். அம்மாவின் அன்றாட பாதுகாப்பையும், பேறுகால விடுப்பையும், அவளின் மறுபேறுக்கான உடல் நலத்தையும் பற்றி பேசுகிறார்கள். உங்களின் கருத்து அவர்களின் ஊழியத்துக்கு இரட்டைச் சுமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல அப்பாஸ் நசீர் என்பவர் குறிப்பிடுகையில், "இம்ரான்கானின் பெண்ணியம் பற்றிய பார்வை அவருடைய பிழையான புரிதலைக் காட்டுகிறது. அவர் சிறிதளவே அறிந்த விழிப்புணர்வு பெற்ற விஷயங்களில் கருத்து தெரிவிப்பதில்லை அல்லது பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.
இப்படியான சர்ச்சை விவாதம் ஒரு பக்கமிருக்க, அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிபர் பர்வேஸ் முஷாரஃப் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பெண்கள் எல்லாவற்றையும் பார்த்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தார்.
முஷாரஃப்பின் இந்த பிற்போக்குத் தனமான ட்வீட்டுக்கு, இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரேஹம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications