வேலை செய்யாமல் போன பாராஷுட்... மனைவியைக் கொல்ல வித்தியாசமாக முயற்சித்த கணவனின் சதி அம்பலம்!
இங்கிலாந்து நாட்டில் எமிலி சில்லர்ஸ் என்ற நபர் தன் மனைவி விக்டோரியாவைக் கொல்ல முயற்சித்த வித்தியாசமான சதித் திட்டம் அம்பலம் ஆகியுள்ளது.
லண்டன்: இங்கிலாந்தில் எமிலி சில்லர்ஸ் என்ற நபர் தன் மனைவியைக் கொல்ல முயற்சித்த வித்தியாசமான சதித் திட்டம் அம்பலம் ஆகியுள்ளது. அவரது மனைவி விக்டோரியா ஸ்கை டைவிங் செய்வதற்கு குதிக்கும் முன் , அவரது பாரசூட்ட்டில் வேண்டும் என்றே இவர் பழுது ஏற்படுத்தியது தெரியவந்துள்ளளது.விக்டோரியா தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தெற்கு இங்கிலாந்தின் சிறிய நகரமான சாலீஸ்புரி பிளானில் வசித்து வருகின்றனர் எமிலி சில்லர்ஸ் மற்றும் விக்டோரியா சில்லர்ஸ் தம்பதியினர். ஸ்கை டைவிங் செய்வதில் திறமை பெற்ற விக்டோரியா அடிக்கடி ஸ்கை டைவிங் செய்வதை வழக்கமாக வைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஸ்கை டைவிங் செய்வதற்கு சென்ற விக்டோரியாவின் பாராசூட் கடைசி நேரத்தில் சரியாக வேலை செய்யாததால் பெரிய விபத்து ஏற்பட்டது.

கீழே குதிக்கும் போது பாராசூட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக அதை சரியாக விரிக்க முடியாமல் சிரமப் பட்டுள்ளார் விக்டோரியா. சொந்தமாக விரிக்கும் கடைசி முயற்சியும் வேலை செய்யாமல் போனதால் 4000 அடி உயரத்தில் இருந்து வேகமாக கீழே விழுந்துள்ளார். இதனால் மோசமாக காயம் அடைந்த விக்டோரியா தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தை விசாரித்த இங்கிலாந்து போலீஸ் விக்டோரியாவின் கணவர் எமிலி சில்லர்ஸ் தான் விக்டோரியவைக் கொல்ல இந்தச் சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. விக்டோரியா குதிப்பதற்கு முன் எமிலி சில்லர்ஸ் வேண்டும் என்றே அவரது பாராசூட்டில் சில மாறுதல்களை செய்துள்ளதாக போலீஸ் அறிக்கை அளித்துள்ளது.
மேலும் அவர் இதற்கு முன்பே விக்டோரியாவைக் கொல்ல சில முறை முயற்சித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன் ஒருமுறை விக்டோரியா சமையல் செய்வதற்கு முன் இவர் வேண்டும் என்றே கேஸை திறந்து வைத்துவிட்டு வெளியே சென்று நின்றதாக விக்டோரியா விசாரணையில் கூறியுள்ளார். அந்த முறை நூலிழையில் உயிர் தப்பியதாக அவர் தோழி போலீசில் தெரிவித்துள்ளார்.
விக்ட்டோரியாவின் 160,000 ரூபாய் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே இவர் தன மனைவியை கொல்ல முயற்சித்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது இங்கிலாந்து போலீஸ்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications