ஒரு வாரத்துக்கு, மாசத்துக்கு மனைவி வேண்டுமா?.. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தோனேசியா நெட்வொர்க்
ஜகார்த்தா: இந்தோனேசியா கிராமங்களில் சுற்றுலாப் பயணிகள் எத்தனை நாட்களுக்கு மனைவி வேண்டுமோ அத்தனை நாட்களுக்கு காசு கொடுத்துவிட்டு தாங்கள் விரும்பும் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். இதுபோன்ற திருமணங்கள் ஒரே பெண்ணுக்கு 20 முறைக்கு மேல் கூட நடத்தி வைக்கப்படுகிறதாம்.
தமிழ்நாட்டில் தாலி சென்டிமென்ட், திருமண சென்டிமென்ட் என்பது மிகவும் அதிகம். இந்த ஒரு விஷயத்தை வைத்து தான் பல சீரியல்கள் பல ஆண்டுகாலமாக வெற்றி பெற்று வருகின்றன. ஆனால், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஒரு சம்பவம் வேற ரகம். சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பிரயமானவளே பட பாணியில் காண்டிராக்ட் திருமணங்கள் அதிகரித்து வருகிறதாம்.

அதாவது, நீங்கள் இந்தோனேசியாவில் சென்று தங்கியிருக்கும் நாட்களுக்கோ, மாதத்துக்கோ, எத்தனை நாட்களுக்கு வேண்டுமோ அந்த நாட்களுக்கு தாங்கள் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். அங்கிருந்து வந்துவிட்டால் அந்த திருமணம் செல்லாததாகிவிடும். இதற்கென ஒரு தனி நெட்வொர்க்கே இருக்கிறதாம். பகீர் கிளப்பும் இந்த திருமண முறை குறித்து தெரிந்து கொள்ளலாம்..
இந்தோனேசியாவில் சுற்றுலாவுக்காகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து இந்த தற்காலிக திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்தோனேசிய கிராமங்களில் உள்ள இளம்பெண்கள் இந்த தற்காலிக திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேற்கு இந்தோனேசியாவில் உள்ள பன்கக் நகருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை இந்த திருமணங்கள் மிகவும் ஈர்த்து வருகின்றன. இந்த திருமணத்தை செய்து கொள்வதற்காகவே அந்நாட்டுக்கு பலரும் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த திருமணங்களை செய்து கொள்வதற்காக அதிக அளவில் இங்கு வருகிறார்களாம். இந்த தற்காலிக திருமணம் PLEASURE மேரேஜ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளெசர் மேரஜில் சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுத்து அந்த கிராமப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
சுற்றுலாப் பயணிகள் எத்தனை நாட்கள், மாதங்கள் இந்தோனேசியாவில் தங்குகின்றனரோ அந்த காலம் வரை அந்த நபருக்கு திருமணம் செய்து கொள்ளும் பெண் மனைவியாக வாழ்வார். சுற்றுலாப் பயணி இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டவுடன் இந்த திருமணம் செல்லாததாகவிடுமாம். வறுமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு இளம்பெண்களை இந்த வகை திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தி தள்ளுவதாகவும் சொல்லப்படுகின்றன.
கிராமத்தில் உள்ள இளம்பெண்களை அழைத்து வருதல், சுற்றுலாப் பயணிகளைப் பார்த்து பேசுதல், திருமணம் செய்து வைப்பது, திருமணத்துக்கான ஏற்பாடுகள் என இந்த திருமணத்துக்கான அனைத்து வேலைகளையும் கனக்கச்சிதமாக செய்து வைக்க தனி நெட்வொர்க்கே அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த பிளெசர் மேரஜில் ஒரே பெண்ணுக்கு 20 முறை கூட திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரு தரப்பினரை இந்த திருமணங்கள் மிகவும் ஈர்த்து வந்தாலும், இந்த திருமண முறைக்கு சர்வதேச அளவில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
திருமணம் என்பது பெண்ணும், ஆணும் விரும்பி செய்து கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதாகும். ஆனால், இதுபோன்ற திருமணங்கள் பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். மேலும், இது ஆரோக்கியமற்ற சமுதாயத்துக்கு வழிவகுக்கும் என்று
பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications