மர்ம சூட்கேஸில் வெடிகுண்டு? ‘பீதி’ - விரைந்து வந்த போலீசாருக்கு ஏமாற்றம்.. உள்ளே இருந்த 18+ டாய்ஸ்!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு சூட்கேசை பரிசோதனை செய்த காவல்துறையினருக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சியிருக்கிறது.

மேலும், சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் 'செக்ஸ் டாய்ஸ்' எனப்படும் வயது வந்தோர்களுக்கான விளையாட்டு பொருட்கள் இருந்துள்ளன.

இந்தச் சம்பவம் ஜப்பான் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பான செய்திகளும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

 மர்ம சூட்கேஸ்

மர்ம சூட்கேஸ்

ஜப்பானின் ககேகாவாவில் கல்லறை சதுக்கம் ஒன்று உள்ளது. இந்த கல்லறைக்கு வெளியே உள்ள பார்க்கிங்கில் சில்வர் கலர் சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. இதனை அங்கு வந்தவர்கள் கவனித்துள்ளனர். ஆனால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து தனது உறவினருக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தினர் இந்த சூட்கேசை பார்த்துள்ளனர். சம்பந்தமே இல்லாத இடத்தில் சூட்கேஸ் கிடந்த நிலையில் பயந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு

வெடிகுண்டு

ஜப்பானில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் நடப்பது அரிது. ஏனெனில் அந்நாட்டு மக்களுக்கு குண்டு வெடிப்பின் தாக்கம் என்னவென்று தெரியும். எனவே இதுபோன்ற மோசமான வன்முறை சம்பவங்களில் குற்றவாளிகள் ஈடுபடுவதில்லை. மேலும், அப்படியான தாக்குதல் நடத்துபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையும் அதிகம். இவ்வாறு இருக்கையில், சூட்கேஸில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவல் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 வெடிகுண்டு நிபுணர்கள்

வெடிகுண்டு நிபுணர்கள்

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சந்தேகத்திற்குரிய சூட்கேஸ் கிடந்த இடத்தைச் சுற்றி சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சூட்கேஸை நோக்கி மெல்ல முன்னேற தொடங்கியுள்ளனர். அவர்களை கண்காணிக்க உள்ளூர் ஊடகங்கள் ஹெலிகாப்டரை அனுப்பியது. முதலில் வெப்ப அலைகளை ஆராயும் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டதில் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

 செக்ஸ் டாய்ஸ்

செக்ஸ் டாய்ஸ்

கடைசியாக சூட்கேஸை நெருங்கியவுடன்தான் அதன் உள்ளே இருப்பது வெடிகுண்டு அல்ல 'செக்ஸ் டாய்ஸ்' எனப்படும் வயது வந்தோர்களுக்கான விளையாட்டு பொருட்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் நிம்மதியடைந்துள்ளனர். இது குறித்து பேட்டியளித்த காவல்துறை அதிகாரிகள், வெடிபொருட்கள் இல்லாதது நிம்மதியளித்துள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த இடம் குப்பை கொட்டும் பகுதி என்பதால் அந்த பெட்டியை யாரோ இங்கு வீசி சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+