தடுப்பூசி போட தயங்கியதால் விளைவு.. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் மக்கள் பலி அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில், திடீரென கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

தேசிய கொரோனா வைரஸ் தகவல் மையத்தின்படி, ரஷ்யா 8,027,012 கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 224,310 இறப்புகளை உறுதி செய்துள்ளது.

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முரஷ்கோ, கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தடுப்பூசி போட்டு வேலைக்குத் திரும்புமாறு தனிமைப்படுத்தப்பட்ட அல்லது ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரே நாளில் அதிக கேஸ்கள்

ஒரே நாளில் அதிக கேஸ்கள்

ரஷ்யா, திங்கள்கிழமையான நேற்று அதிக எண்ணிக்கையிலான ஒரே நாள் கொரோனா வைரஸ் கேஸ்களை பதிவு செய்துள்ளது. 24 மணி நேரத்தில் 34,325 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. 998 பேர் கொரோனாவால் அங்கு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். அதாவது 1000 பேருக்கு 2 பேர் குறைவு.

ரஷ்ய வரலாற்றில் முதல் முறை

ரஷ்ய வரலாற்றில் முதல் முறை

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக 24 மணிநேர காலப்பகுதியில் 1,000 இறப்புகளை ரஷ்யா பதிவு செய்துள்ளது இதுதான் முதல் முறை. இது குறைந்த தடுப்பூசி வீதத்தின் காரணமாக ஏற்பட்டது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ரஷ்ய அரசு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்துவதற்கு முன் வந்தாலும் கூட மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அங்கு குறைந்த அளவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்கிறார்கள் சர்வதேச பத்திரிக்கையாளர்கள்.

ஸ்பூட்னிக் தடுப்பூசி

ஸ்பூட்னிக் தடுப்பூசி

உலகிலேயே முதன் முதலாக கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்ததாக அறிவித்த நாடு ரஷ்யா. ஸ்பூட்னிக் v என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டது. ஆனால், ரஷ்யாவில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை சுமார் 10 கோடியாக உள்ளது. இரு டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கை 4.73 கோடி. அதாவது அந்த நாட்டில் முழு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 32.8 சதவீதம் மட்டுமே. இதுவும் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு காரணமாக இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த, மக்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க சுகாதார பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

Recommended Video

    Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil
    அபராதம்

    அபராதம்

    முகக் கவசம் அணிந்து மூக்கு, வாய் போன்றவற்றை மறைக்காத பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்கத் தொடங்குவார்கள் என்று மாஸ்கோ போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    எச்ஐவி கிருமி

    எச்ஐவி கிருமி

    இதனிடையே, தென்னாப்பிரிக்கா, ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிக்கவில்லை என்று அறிவித்துள்ளது. இது ஆண்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மாற்றப்பட்ட அடினோவைரஸ் இதற்கு காரணம் என்றும் தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+