ரோட்டில் முற்றிய சண்டை.. ஆணின் 'அந்த' பகுதியை கடித்து துப்பிய பெண்.. எடுத்துக்கொண்ட பறந்த கடற்பறவை
எடின்பர்க்: ஸ்காட்லாந்து நாட்டில் நடுரோட்டில் சண்டை முற்றியதால் ஆணின் நாக்கை பெண் ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இருப்பினும், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொதுமக்கள் பலரும் தங்கள் வேலைகளை இழந்திருந்தனர். இதன் காரணமாக அந்நாட்டில் மக்கள் விரக்தியுடனேயே இருந்தனர். நாட்டின் நிலை அப்படியிருந்த சமயத்தில்தான் ஒரு விநோத சம்பவமும் அங்கு நடந்துள்ளது.

தெரு சண்டை
ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மெக்கென்சி. இவருக்கும் பெத்தானே ரியான் என்ற பெண்ணுக்கும் சாலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் விரைவில் சண்டையாகவே முற்றியுள்ளது. அப்போது ஜேம்ஸ் மெக்கென்சி அந்த பெண்ணை திடீரென்று அடிக்க முயன்றுள்ளார்.

கடித்துத் துப்பினார்
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஜேம்ஸ் மெக்கென்சியை கீழே தள்ளியே பெத்தானே ரியான், வலுக்கட்டாயமாக அவரது உதட்டில் முத்தமிட்டுள்ளார். பின்னர், அப்படியே அவரது நாக்கின் ஒரு பகுதியைக் கடித்து துப்பியுள்ளார். இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ஜேம்ஸ் மெக்கென்சியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எடுத்துக்கொண்ட பறந்த கடற்பறவை
அறுவை சிகிச்சை மூலம் அவரது நாக்கை ஒட்ட வைத்து விட முடியும் என்பதால், அங்கிருந்தவர்ள் அவரது நாக்கை தேடியுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், அந்தப் பக்கம் வந்த ஒரு கடற்பறவை மெக்கென்சியை நாக்கை அலேக்காக் தூக்கிக் கொண்டு பறந்துவிட்டது. நாக்கு கிடைக்காததால் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனால் நாக்கின் ஒரு பகுதியை அவர் இழந்துவிட்டார்.

வழக்கு விசாரணை
இது தொடர்பாக ஸ்காட்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஜேம்ஸ் மெக்கென்சியை தனது நாக்கில் மூன்று செமி வரை இழந்துவிட்டதாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட பெத்தானே ரியானியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து விரைவில் தண்டை குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications