காசாவில் போர் நிறுத்தத்துக்கான ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்.. வாக்களிக்காமல் விலகிய இந்தியா
ஜெனீவா: காசா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஐநா மனித உரிமை கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்தியா வாக்களிக்காமல் விலகியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 33,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் போர் நிறுத்தம், இஸ்ரேலுக்கான ஆயுத சப்ளை நிறுத்தம், பாலஸ்தீன சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி, 4 தீர்மானங்களை பாகிஸ்தான், ஐநா மனித உரிமை கவுன்சிலில் முன்வைத்தது. இந்த தீர்மானத்திற்கு எதிராக வழக்கம் போல அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 4 மேற்கு நாடுகள் வாக்களித்தன. ஆனால் மறுபுறம், பங்களாதேஷ், சீனா, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா என 28 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தானின் தீர்மானம் கண்டிக்க தவறிவிட்டது என்றும், 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கு ஹமாஸ்தான் காரணம் என்பதை சுட்டிக்காட்ட தவிறிவிட்டது என்றும் கூறி இந்த அமர்விலிருந்து வெளியேறிவிட்டது. இறுதியாக பெரும்பான்மை வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின்படி, காசா மீதான சட்டவிரோத முற்றுகையை காசா உடனடியாக நீக்க வேண்டும், உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களின் விற்பனை, பரிமாற்றம் ஆகியவற்றை தடுத்தல், பட்டிணியிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் போன்றவற்றை இஸ்ரேல் உடனடியாக செய்ய வேண்டும்.
இந்தியாவை பொறுத்த அளவில், பாகிஸ்தான் கொண்டு வந்த 4 தீர்மானங்களில், போர் நிறுத்தம் குறித்த தீர்மானத்தை தவிர 3 தீர்மானத்திற்கு ஆதரவளித்தது. 4வது தீர்மானத்திற்கு இந்தியா ஆப்சென்ட் ஆனது.
எப்படி இருப்பினும் போர் நிறுத்தமும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வும் தான் காசாவை மீட்டெடுக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications