இலங்கைக்கு எதிரான யு.எஸ். தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம்- இந்தியா புறக்கணிப்பு!!

Subscribe to Oneindia Tamil

India to back UNHRC motion on Lanka
ஜெனிவா: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

இலங்கையில் கடந்த 2009 ஆண்டு போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டுவந்தது.

இந்த தீர்மானம் குறித்து பல நாட்டு பிரதிநிதிகள் விவாதித்தனர். இலங்கை அரசைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரினர்.

இலங்கை மீதான தீர்மானம் தொடர்பாக பல நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்த நிலையிலும், இந்த தீர்மானம் தொடர்பாக இந்தியா எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இன்றுவரை சஸ்பென்ஸ் நீடித்தது.

இந்நிலையில் இந்தியா தனது தரப்பில் வாதத்தை முன்வைத்து பேசிவிட்டு, வாக்களிக்காமல் பின்வாங்கியது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களித்தன.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக, இலங்கைக்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

இதனால் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் வெற்றிகரமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேறியது. இதனால் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+