இந்தியா துணிச்சல்! 5 நாட்களாக கெஞ்சிய அமெரிக்கா! மறுநாளே டெல்லிக்கு பறந்த ரஷ்ய பார்சல்! மாஸ் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருக்கும் நெருக்கத்தை எப்படியாவது குறைக்கலாம் என்று அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த 2+2 ஆலோசனை கூட்டத்தில் கூட நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இது எதுவும் இந்தியாவை இதுவரை கட்டுப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அமெரிக்கா இடையே சமீபத்தில் 2+2 மீட்டிங் நடத்தப்பட்டது. அதாவது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 4 அமைச்சர்கள் கலந்து கொண்டதால் இது 2+2 ஆலோசனை கூட்டம் என்று அழைக்கப்பட்டது.

Recommended Video

    இது Final | India-வை உற்று நோக்கிய உலக நாடுகள் | 2+2 meeting | Oneindia Tamil

    ரஷ்யா

    ரஷ்யா

    ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி இந்த ஆலோசனை கூட்டம் 14ம் தேதிதான் அதிகாரபூர்வமாக நிறைவு பெற்றது. மொத்தம் இந்த 5 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு விஷயங்கள் பற்றி இதில் பேசப்பட்டது. ஆனாலும் இந்த ஆலேசனை கூட்டத்தின் முக்கிய தீம் இந்தியா - ரஷ்யா இடையிலான உறவுதான். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இரண்டு நாட்டு மீட்டிங்

    இரண்டு நாட்டு மீட்டிங்

    ஆனால் இந்தியாவோ ரஷ்யாவை எந்த மேடையிலும் எதிர்க்கவில்லை. ஐநாவின் எந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை. அதோடு மேற்கு உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இந்தியா கூடுதல் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. அதிலும் ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

    இந்தியா அமெரிக்கா

    இந்தியா அமெரிக்கா

    அதோடு ரஷ்யாவிடம் இந்தியா ராணுவ ரீதியான கொள்முதல்களையும் செய்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவுடன் அமெரிக்காவின் 2+2 மீட்டிங் நடந்தது. ரஷ்யாவை இந்தியா அதிகம் நம்பி இருக்க கூடாது. ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்ட கூடாது என்று அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த மீட்டிங்கில் பேசியதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் தொடங்கி ஆயுதங்கள் வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும் இதில் அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்து இருக்கிறது.

    வர்த்தகம் குறையும்

    வர்த்தகம் குறையும்

    அதாவது ரஷ்யா - இந்தியா இருக்கும் வர்த்தகத்தை குறைக்கும் வகையில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மீட்டிங் முடிந்த நாளே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ராணுவ வர்த்தகத்தை மேற்கொண்டு உள்ளது. ரஷ்யாவிடம் இந்தியா எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டத்தை வாங்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டது. இதன் பாகங்கள் இன்று இந்தியாவிற்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    மிஸைல் சிஸ்டம்

    மிஸைல் சிஸ்டம்

    இந்த மிஸைல் சிஸ்டத்தை ரஷ்யாவிடம் இந்தியா வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. ரஷ்யாவிடம் எஸ் 400 சிஸ்டத்தை இந்தியா வாங்குவதை நாங்கள் பெரிதாக விரும்பவில்லை என்று அமெரிக்கா வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ் 400 பாகங்களை வாங்கி உள்ளது. விமானம் மூலமும், கப்பல் மூலமும் இந்த பக்கங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

    எஸ் 400 பாகங்கள்

    எஸ் 400 பாகங்கள்

    ஏற்கனவே எஸ் 400 பாகங்கள் சில இந்தியாவிற்கு வந்த நிலையில்தான் தற்போது அதன் பல்வேறு எஞ்சின்கள் இந்தியாவிற்கு வந்தன. இந்த பாகங்கள் அதற்கு உரிய ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தியா ரஷ்யா உறவை கேள்வி கேட்கும் வகையில் அமெரிக்கா 5 நாட்கள் மீட்டிங் நடத்தியது. இதில் இந்தியாவிற்கு பல அறிவுரைகளை அமெரிக்கா வழங்கியதாக கூறப்பட்டது. ஆனாலும் மறுநாளே இந்தியா துணிச்சலாக ரஷ்யாவிடம் வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+