For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களை விடுங்க.. நேபாளம் கூட இந்தியாவை மிரட்டும் பாருங்க.. சீன ஊடகத்தின் கொழுப்பு மிரட்டல்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் இந்தியா மற்றும் சீனா இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ், சீனா, பாகிஸ்தான் அல்லது நேபாளத்திலிருந்து கூட இந்தியா "இராணுவ அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும்" என்று எச்சரித்துள்ளது.

ஷாங்காய் அகாடமி ஆஃப் சோசியல் சயின்சஸின் சர்வதேச உறவுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ஹு ஜியோங்கின் பேச்சை மேற்கோள் காட்டி புதன்கிழமை குளோபல் டைம்ஸ் செய்தித்தாளில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் "சீனா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் இந்தியா ஒரே நேரத்தில் எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் சீனாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கிறது, நேபாளமும் சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது,

இப்போது வேண்டாம்.. லடாக் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள்?.. ஜிங்பிங் சொன்ன அந்த விஷயம்! இப்போது வேண்டாம்.. லடாக் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள்?.. ஜிங்பிங் சொன்ன அந்த விஷயம்!

சீனா பத்திரிக்கை மிரட்டல்

சீனா பத்திரிக்கை மிரட்டல்

மேலும் பாகிஸ்தானும், நேபாளமும் சீனாவின் பல்வேறு முன்முயற்சிகளின் முக்கிய பங்காளிகளாக உள்ளன. சாலை போடுவது மற்றும் எல்லையில் பதட்டங்களை அதிகரிப்பது போன்றவற்றை இந்தியா செய்தால், இந்தியா இரண்டு அல்லது மூன்று எல்லை முனைகளில் இருந்து இராணுவ அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும். இது இந்தியாவின் இராணுவ திறனுக்கு அப்பாற்பட்டது, இது இந்தியாவுக்கு பேரழிவு தரக்கூடிய தோல்விக்கு வழிவகுக்கும்" எச்சரிக்கப்பட்டுள்ளது..

மோதல் நடந்து சீன எல்லையில்

மோதல் நடந்து சீன எல்லையில்

எல்லை நிலைகளை மாற்றுவதற்கு சீனாவிற்கு "எந்த எண்ணமும் இல்லை" என்றும், 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட உண்மையான கட்டுப்பாட்டு கோடுகளின் சீனப் பக்கத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும் குளோபல் டைம்ஸிடம் ஆராய்சியாளர் ஷியோங் கூறியதாக தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மீண்டும் நிகழாமல்

மீண்டும் நிகழாமல்

கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15 ஆம் தேதி சீன ராணுவத்தினரின் வன்முறை மோதலின் போது, கர்னல் அந்தஸ்திலான அதிகாரி உட்பட 20 இந்திய ராணுவ வீரர்களைக் கொன்ற சம்பவம் குறித்து இந்தியா முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தி உள்ளது.. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் பொறுப்புக்கூறப்படுபவர்களை தண்டிக்க வேண்டும் என்று கோருகிறது.

இந்தியாவுக்கு எச்சரிக்கை

இந்தியாவுக்கு எச்சரிக்கை

"இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். தற்போதைய நிலைமையை இந்தியா தவறாக மதிப்பிடக்கூடாது. சீன ராணுவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. சீனா அதன் பிராந்திய இறையாண்மையை பாதுகாக்கும்" என்று தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடாதது ஏன்

வெளியிடாதது ஏன்

இதற்கிடையில், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட இராணுவ அகாடமியின் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ நிபுணர் குளோபல் டைம்ஸிடம் கூறுகையில், "சீனா பலியானவர்களின் எண்ணிக்கையை வெளியிடாததற்கு காரணம், இரு நாடுகளிலும் உள்ள மக்களிடடையே கவலையை அதிகரிப்பதை சீனா விரும்பவில்லை என்பதே காரணம், உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு ஒப்பீடும் இரு தரப்பிலும் தேசியவாத உணர்வைத் தூண்டக்கூடும். மேலும் இதுபோன்ற நிகழ்வு இருவருக்கும் பதட்டங்களைத் தணிக்க முற்றிலும் உதவாது" என்று கூறியுள்ளார்.

வரலாற்று நோக்கம்

வரலாற்று நோக்கம்

இதனிடையே சீனாவுடன் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் எல்லை பதட்டத்தை குறைக்க இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதேசமயம், 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வளர்ந்து வரும் சக்திகளான சீனாவும் இந்தியாவும் தங்கள் சொந்த வளர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான வரலாற்று நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சரான வாங் யி வலியுறுத்தியுள்ளார்.

சீனா மீது புகார்

சீனா மீது புகார்

புதன்கிழமை, ஜெய்சங்கர் வாங் யியுடன் பேசினார், சீனா "முன் கூட்டியே செய்த திட்டமிட்ட நடவடிக்கையால் வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தது என்று கூறினார். எனினும் ஒட்டுமொத்த நிலைமை ஒரு பொறுப்பான முறையில் கையாளப்படும் என்றும், இரு தரப்பினரும் ஜூன் 6 ஆம் தேதி படை விலக்கல் புரிந்துணர்வை நேர்மையாக செயல்படுத்துவது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

Recommended Video

    India-China border : இந்தியாவிடம் உறவாடி முதுகில் குத்தும் சீனா..நேரு முதல் மோடி வரை - முழு விபரம்

    English summary
    Chinese mouthpiece says . if India escalates border tensions, it could face military pressure from two or even three fronts (China, Pakistan or even Nepal) , which is far beyond India's military capability and this might lead to a disastrous defeat for India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X