எங்கே போகிறது இந்தியா?- அதிகரிக்கும் பாலியல் வன்முறைகளுக்கு ஐநா கவலை
ஜெனிவா: இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுமிகள் மீதான பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.
மேலும், அதை தடுத்து அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அதிகாரிகளும் தங்களின் கடமைகளை மீறிவருகின்றன என்று ஐநா சபை வருத்தமும் தெரிவித்துள்ளது.
ஐநா சபை மற்றும் குழந்தைகள் உரிமை கண்காணிப்பத்தின் ஆய்வின் அடிப்படையில் இந்த கவலைக்கு உள்ளாக்கும் தகவலானது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச வன்முறை:
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் சகோதரிகளான இரு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு , தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

மூன்றில் ஒருவர் சிறுமி:
22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக கூறப்படும் இந்தியாவில் அதில் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர். இவர்களை நாசப்படுத்தியவர்களில் சரிபாதிப் பேர் நன்கு அறிமுகமானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர்களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளது.

வீதிக்கு வீதி இந்தக்கதை:
சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக, இது போன்ற பல சம்பவங்கள் உள்ளூர் வீதிகளில் நடைபெறுகின்றன.

கவனத்துக்கு வருவதில்லை:
அது போன்ற சம்பவங்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாமல், இதன் மூலமாக ஊடகங்களின் பார்வையில் படாமல் பலரது கவனத்தை ஈர்க்க தவறி விடுகிறது. அவற்றைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடுமையான நடவடிக்கை உறுதி:
இது போன்ற பாலியல் வன்முறைகளின் மேல் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பெண் சிசுக் கொலை, பெண்களை புறக்கணித்து கைவிடுதல், பெண் கருக்கலைப்பு ஆகியவற்றை தடுக்க இந்தியாவில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications