பாகிஸ்தானுக்கு தான் சேதாரம்..நியூயார்க் டைம்ஸ் தந்த ஆதாரம்! இந்தியா பக்கா சேஃப்.. போட்டோ பாருங்க ஜி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா மே 7 அன்று பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நான்கு நாள் திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, இந்தியா, பாகிஸ்தானின் முக்கிய ராணுவத் தளங்கள், விமான நிலையங்களை தாக்கியாதாகவும், இந்தியா தரப்பில் சேதத்தை சந்தித்ததற்கான ஆதரங்கள் கிடைக்கவில்லை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்டன. குறிப்பாக எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் பல்வேறு விமான தளங்களும் தாக்கி அழிக்கப்பட்டன.

ஆனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்தியாவின் விமானங்களை தான் தாக்கி விட்டோம் என பாகிஸ்தான் பொய் சொல்லி வந்தது. உண்மையில் இந்தியாவின் துல்லிய தாக்குதலால் பாகிஸ்தானின் போலாரி விமானத் தளம், நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி விமான தளம் பலத்த சேதத்தை சந்தித்தது.

India Pakistan New York Times

இந்நிலையில், இந்த மோதலின் போது, இந்தியா தரப்பில் பாகிஸ்தானின் முக்கிய ராணுவத் தளங்கள், விமான நிலையங்களை தாக்கியாதாகவும், இந்தியா தரப்பில் சேதத்தை சந்தித்ததற்கான ஆதரங்கள் கிடைக்கவில்லை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், செயற்கைக்கோள் படங்கள் மூலம் இந்திய தாக்குதலால் பாகிஸ்தானின் ராணுவத் தளங்களில் ஏற்பட்ட சேதம் தெளிவாக காணப்படுகிறது என கூறியுள்ளது.

அணு ஆயுதங்களை கொண்ட இரண்டு நாடுகள் இடையே நடந்த இந்த மோதல், கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய மோதல் எனவும், இரு நாடுகளும் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் ஒருவருக்கொருவரை தாக்கி ராணுவத் தளங்களில் சேதம் விளைவித்தன என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையங்களான போலாரி, நூர் கான் மற்றும் சர்கோதா ஆகியவற்றில் இந்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் மிக அதிகமாக இருந்ததாகவும், குறிப்பாக நூர் கான் விமான நிலையம், பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை பாதுகாக்கும் தளத்திற்கு அருகில் இருப்பதால் மிகவும் இலகுவான இலக்காக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் இந்தியாவின் உதம்பூர் விமானத் தளத்தை தாக்கி சேதப்படுத்தியதாக கூறினாலும், மே 12 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் அங்கு சேதம் எதுவும் காணப்படவில்லை. அதே நேரத்தில், இந்தியாவின் தாக்குதல்கள் இலக்குகளை துல்லியமாகப் கண்டறிந்து மிகச் சரியாக நிகழ்த்தப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நான்கு நாள் நடந்த மோதலில் இந்தியா தாக்குதல்களை திட்டமிட்டு, பாகிஸ்தானின் முக்கிய ராணுவப் பகுதிகளுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்தியதாகவும், இது பாகிஸ்தான் சொன்ன சேத அளவை விட மிகப்பெரியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸின் இந்த அறிக்கை மூலம், இந்தியா நடத்திய தாக்குதல்களால், பாகிஸ்தானின் விமானப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் முக்கியமான விமானத் தளங்களின் பாதுகாப்பு குறைபாடுகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளதோடு, உலக அளவில் இந்தியாவின் போர் திறன் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+