இந்தியாவுக்கு மிக முக்கிய இடம்! பதறும் பாகிஸ்தான்.. இஸ்ரேல் போடும் "ஹெக்சகன்" கணக்கு.. என்ன மேட்டர்?
டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், நெதன்யாகு தரப்பில் இருந்து மிக முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்தியக் கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், ஒரு மிகப் பெரிய புவிசார் அரசியல் கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளது. இதில் இந்தியாவும் மிக முக்கிய பங்காற்றும் எனத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வப் பயணமாக இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் முக்கியமான துறைகளில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இதற்கிடையே இஸ்ரேலில் இருந்து ஒரு புதிய புவிசார் அரசியல் கூட்டணி குறித்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹெக்சகன் கூட்டணி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஹெக்சகன் கூட்டணி" என்ற புதிய கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.. மத்தியக் கிழக்கில் உள்ள தீவிரவாத அச்சுகளை எதிர்க்கவே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக நெதன்யாகு விளக்கினார். இத்திட்டத்தில் இந்தியா, இஸ்ரேல், கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் முக்கிய பார்டனர் நாடுகளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தான் மத்தியக் கிழக்கு தீவிரவாதத்திற்கு எதிராக இந்த கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டணி அரபு நாடுகள், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளும் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமான நேரம்
இந்த அறிவிப்பு வந்துள்ள நேரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் இணைந்து நேட்டோ பாணியிலான ஒரு ஒப்பந்தத்தில் கைகோர்த்துள்ளது. இதற்கு எல்லாம் கவுன்டர் கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இதுபோன்ற ஒரு கூட்டணியை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்றும் நாளையும் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது, இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரே சிந்தனை கொண்ட நாடுகளை ஒன்றிணைந்து, வளர்ந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும். இந்த நாடுகள் அனைத்தும் ஒரு விஷனை பகிர்ந்து கொள்கின்றன. நமது ஒத்துழைப்பு சிறந்த முடிவுகளைத் தரும். பாதுகாப்பை உறுதி செய்யும்" என்றார்
நெதன்யாகு இரண்டு முக்கிய அச்சுறுத்தல்களைக் குறிப்பிட்டார்:
தீவிர ஷியா ஆக்சைல்- முக்கியமாக ஈரான், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற குழுக்களின் அச்சுறுத்தல்.
வளர்ந்து வரும் தீவிர சன்னி ஆக்சைல் - மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் செயல்படும் தீவிரவாத குழுக்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பயங்கரவாதம் மற்றும் விரோதச் சக்திகளுக்கு எதிராக நட்பு நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது.
அடுத்த கட்டத்திற்குச் செல்லும்
செப்டம்பர் 2025இல் கையெழுத்திடப்பட்ட சவுதி- பாகிஸ்தான் இடையேயான போடப்பட்ட பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தம், "இஸ்லாமிய நேட்டோ" என்று குறிப்பிடப்பட்டது. இதன் மூலம் புவிசார் அரசியலில் முக்கிய மாற்றங்கள் நடந்தது. அதற்குப் பதிலடி தரும் வகையிலேயே இஸ்ரேல் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது. ஏற்கனவே இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஆபிரகாம் உடன்படிக்கைகள் மற்றும் I2U2 கூட்டமைப்பு போன்றவற்றில் இணைந்து பணியாற்றி வருகிறது.
இருப்பினும், இந்தியா எப்போதும் இதுபோன்ற ராணுவ அமைப்புகளைச் சேர்வதைத் தவிர்த்தே வந்துள்ளது. அனைத்துத் தரப்பினருடனும் நட்புறவைப் பேண விரும்புகிறது. எனவே இந்தியா என்ன முடிவை எடுக்கும் என்பது முக்கியமானதாக இருக்கும்.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications