ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 94வது இடம்!
பெர்லின்: சர்வதேச அளவில் அதிகமான ஊழல் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டும் 94 வது இடமே இந்தியாவிற்கு அளிக்கப்பட்டிருந்தது. 2011ம் ஆண்டில் ஊழல் பட்டியலில் இந்தியா 95 இடத்தில் இருந்தது
'டிரான்ஸ்பரசி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு, சர்வதேச அளவில் ஊழல் நாடுகள் குறித்த பட்டியலை தயாரித்து, வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஊழல்
2007ம் ஆண்டு 180 நாடுகளிடையே எடுக்கப்பட்ட ஊழல் பற்றி கணக்கெடுப்பில் இந்தியாவிற்கு 72 வது இடம் கிடைத்தது. 2010ம் ஆண்டு அது 87 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2011ல் 95 ஆவது இடத்தை அடைந்தது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிக அளவிற்கு மலிந்துவிட்டது.

36 மதிப்பெண்கள்
நூற்றுக்கு 36 மதிப்பெண்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. 0 மதிப்பெண் என்றால் ஊழல் புரையோடிப்போய்விட்டது. 100 மதிப்பெண் என்றால் ஊழலற்ற, சுத்தமான தேசம் என்று பொருள்.

இலங்கை பரவாயில்லை
அண்டை நாடுகளான இலங்கை, சீனாவை கீழே தள்ளப்பட்டுள்ளது இந்தியா. ஊழல் பட்டியலில் இலங்கை79 வது இடத்திலும், சீனா 80 வது இடத்திலும் உள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான், ஈரான், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இந்தியாவை விட ஊழல் அதிகம் மலிந்துள்ள நாடுகள்.

சோமாலியாவில் அதிகம்
மியான்மர், சோமலியா, வடகொரியா போன்ற நாடுகள் ஊழல் அதிகம் மலிந்துள்ள நாடுகள்

டென்மார்க்கில் குறைவு
உலகில் மொத்தம் உள்ள 177 நாடுகளில், டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications