இஸ்ரேலுடன் நிற்கிறோம்.. பயங்கரவாதிகளுக்கு மோடி தந்த வார்னிங்! ஜெருசலேம் நாடாளுமன்றத்தில் முழக்கம்
டெல்அவிவ்: ''பயங்கரவாதம் மோசமானது. அது சமூகங்களை சீர்குலைத்து வளர்ச்சியை தடுத்து நம்பிக்கையை அரிக்கும். இதுதான் பயங்கரவாதத்தின் நோக்கம். பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அது அமைதியை அச்சுறுத்துகிறது. இதனால் பயங்கரவாதத்தை எதிர்க்க நிலையான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை. இப்போதும், எப்போதும் இந்தியா, இஸ்ரேலுடன் உறுதியுடன் நிற்கிறது'' என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் மோடியும், நெதன்யாகுவும் இருநாடுகள் இடையேயான உறவு பற்றி விவாதித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி, இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு சென்றார். மோடி மோடி என கோஷமிட்டு இஸ்ரேல் எம்பிக்கள் மோடியை வரவேற்றனர்.
நாடாளுமன்றத்தில் மோடி உரை
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது கூறியதாவது: ''இந்த மதிப்புமிக்க சபையின் முன் நிற்பது எனக்கு கிடைத்த பாக்கியம். பெருமை. இந்தியப் பிரதமராகவும், பழம்பெருமை நிறைந்த நாகரீக நாட்டின் பிரதிநிதியாகவும் இங்கு நிற்கிறேன். 1.4 பில்லியன் இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்பு, மரியாதையை இங்கு கொண்டு வந்துள்ளேன்.

இஸ்ரேலுடன் இந்தியா
1950 செப்டம்பர் 17 ம் தேதி இஸ்ரேலை முறையாக இந்தியா அங்கீகரித்தது. அதேநாளில் தான் நானும் பிறந்தேன். 2023 அக்டோபர் 7ல் ஹமாஸ் நடத்திய கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் மரணடைந்தவர்களுக்கும், குடும்பத்தை இழந்தவர்களுக்கும் இந்தியாவின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் வலியை நாங்கள் உணர்கிறோம். உங்கள் துயரத்தில் நாங்கள் பங்கெடுக்கிறோம். இப்போதும், எப்போதும் இந்தியா, இஸ்ரேலுடன் உறுதியுடன் நிற்கிறது.
அமைதிக்கான பாதை எளிதல்ல
காசா அமைதிக்கான முன்முயற்சிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் வழங்கி உள்ளது. இது பாலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வு உட்பட, பிராந்திய மக்கள் அனைவருக்கும் நியாயமான, நீடித்த அமைதியை வழங்கும். அறிவு, தைரியம், மனிதநேயம் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும். அமைதிக்கான பாதை எளிதல்ல என்றாலும் பேச்சுவார்த்தை வகையில் இந்தியா உலகத்துடன் இணைகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு
பயங்கரவாதம் என்பது மோசமானது. அது சமூகங்களை சீர்குலைத்து வளர்ச்சியை தடுத்து நம்பிக்கையை அரிக்கும். இதுதான் பயங்கரவாதத்தின் நோக்கம். பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அது அமைதியை அச்சுறுத்துகிறது.
இதனால் பயங்கரவாதத்தை எதிர்க்க நிலையான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை. அதனால்தான், நீடித்த அமைதியை நோக்கங்களுக்கு பங்களிக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கிறது.
பொதுமக்கள் படுகொலை, பயங்கரவாத செயல்களுக்கு எந்த ஒரு காரணத்தையும் நியாயமாக ஏற்க முடியாது. இந்தியாவும் நீண்ட காலமாக பயங்கரவாத வலியை அனுபவித்த நாடு. 26/11 மும்பை தாக்குதல்களில் இஸ்ரேலியர்கள் உட்பட உயிரிழந்த அப்பாவிகளை இப்போது நினைவு கூறுகிறோம். உங்களை (இஸ்ரேல்) போலவே, இரட்டை வேடங்கள் அற்ற, பயங்கரவாதத்தின் மீது பூஜ்ஜிய சகிப்பு தன்மை கொண்ட கொள்கையை நாங்கள் பின்பற்றி வருகிறோம்" என்றார்.
2 நாள் பயணம்
முன்னதாக பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றார். இஸ்ரேலும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமர் மோடி இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனி விமானத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர். விமானத்தில் இருந்து மோடி இறங்கியதும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புன்னகையுடன், மோடியை வரவேற்றார்.
இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டு புன்னகை தழும்ப பரஸ்பரம் நலம் விசாரித்து கைக்குலுக்கியபடி பேசினர். அதன்பிறகு பிரதமர் மோடியும், நெதன்யாகுவும் இருநாடுகள் இடையேயான உறவு பற்றி விவாதித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி, இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
ஈரான் - அமெரிக்கா போரால் நெருக்கடி.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்! ஆலோசித்தது என்ன? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications