புதினின் துரோகம்.. துப்பாக்கி முனையில் ஹைதராபாத் இளைஞரை போர் புரிய வைத்த கொடூரம்.. இந்தியர் பலி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கட்டட துறை சார்ந்த பணிக்கு ரஷ்யா சென்ற ஹைதராபாத் இளைஞரை ஏமாற்றி பயிற்சி கொடுத்து உக்ரைனுக்கு எதிராக போர் புரிய வைத்த கொடூரம் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி துப்பாக்கியை கழுத்தில் வைத்து போர் புரியாவிட்டால் கொன்றுவிடுவோம். அதன்பிறகு ட்ரோன் தாக்குதலில் இறந்ததாக கூறி விடுவோம் என்று ரஷ்யா மிரட்டியதாகவும், தன்னுடன் போர் புரிந்து வந்த ஒரு இந்தியர் இறந்துவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நம் நாடும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. அதேவேளையில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவில் வேலை தருவதாக கூறி இந்தியர்களை சிலர் அங்கு அனுப்புகின்றனர். அவ்வாறு செல்லும் இந்தியர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கி உக்ரைன் போரில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.

indian-died-and-they-placed-a-gun-to-my-neck-and-compelled-to-involved-war-against-ukraine-says-hyd

இதனால் ரஷ்யாவின் சலுகைகளை நம்பி இளைஞர்கள் யாரும் ஏமாற வேண்டாம். அந்த நாட்டின் ராணுவத்தில் சேர வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருப்பினும் கூட சில இந்தியர்கள் ரஷ்யா வேலை வாய்ப்புகளை நம்பி சென்று பயிற்சி முடித்து உக்ரைன் - ரஷ்யா எல்லையில் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 26ம் தேதி நிலவரப்படி 27 இந்தியர்கள் ரஷ்யாவுக்காக போர் புரிந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் தான் ரஷ்யாவுக்காக இருநாட்டு எல்லையில் போர் புரிந்து வரும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பெயர் முகமது அகமது. இவர் கட்டட துறையில் பணியாற்ற ரஷ்யாவுக்கு சென்றார். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலமாக ரஷ்யா சென்றார். ஆனால் ரஷ்யாவில் இறங்கியவுடன் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது போர் புரிய வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் முகமது அகமது செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,‛‛நான் இருக்கும் இந்த இடம் ரஷ்யா - உக்ரைன் எல்லையாகும். போர் போய் கொண்டிருக்கிறது. நாங்கள் 4 இந்தியர்கள் போர் பகுதிக்கு செல்லமாட்டோம் என்று கூறினோம். ஆனால் அவர்கள் எங்களை மிரட்டினர். ஆயுதங்களை காட்டி மிரட்டினர். கழுத்தில் துப்பாக்கியை வைத்து கொன்றுவிடுவோம். அதன்பிறகு ட்ரோன் தாக்குதலில் இறந்ததாக தெரிவித்து விடுவோம் என்று மிரட்டினர்.

என் காலில் பிளாஸ்டர் போட்டு ஒட்டி உள்ளனர். என்னால் நடக்க முடியவில்லை. என்னை இங்கே அனுப்பிய ஏஜென்ட்டை சும்மா விடாதீர்கள். அவர் தான் என்னை இங்கே சிக்க வைத்தார். நான் 25 நாட்களாக வேலையின்றி இருந்தேன். வேலை கேட்டு கொண்டே இருந்தாலும் பயன் இல்லை. என்னை வலுக்கட்டாயப்படுத்தி ரஷ்யாவில் வேலை இருப்பதாக கூறி இங்கே தள்ளிவிட்டனர். என்னுடன் மொத்தம் 25 பேர் பயிற்சி பெற்றனர். அதில் ஒரு இந்தியன் உள்பட 17 பேர் இறந்துவிட்டனர். ரஷ்யாவுக்காக நான் போர் புரிய விரும்பவில்லை. என்னை காப்பாற்றுங்கள்'' என கண்ணீர் மல்க கூறியுள்ளார்

இதுபற்றி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் Counsellor தடு மாமு கூறுகையில்,‛‛முகமது அகமது தொடர்பான விவரங்களை தூதரகம் ரஷ்யாவுடன் பகிர்ந்துள்ளது அவரை போரில் இருந்து வெளியேற்றும்படி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்தவர்களை வேலை தருவதாக கூறி சில ஏஜென்ட்டுகள் ரஷ்யா அனுப்பி விடுகின்றனர். அவர்களை ரஷ்யாவுக்காக உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபடுத்துகின்றனர். இதனால் இந்தியர்கள் யாரும் ரஷ்யாவின் வேலைவாய்ப்பை நம்பி செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதோடு இந்தியர்களை போர் களத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ரஷ்யாவுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதனை கண்டுக்கொள்ளாமல் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+