ரஷ்யாவை தாக்கிய சுனாமி.. இந்தியர்களுக்கு பறந்த எச்சரிக்கை! உதவி எண் அறிவிப்பு!
மாஸ்கோ: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை
இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கி உள்ளன. ஜப்பானின் ஹனசாகி துறைமுகம், பசிபிக் கடலோர ஹவாய் பகுதியில் 3 மீட்டருக்கு மேல் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 8 புள்ளி 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் ஹவாய் குறைந்த அளவிலான சுனாமி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாட்டின் பசிபிக் கடற்கரையை 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில், கம்சட்காவின் சில பகுதிகளில் 3 - 4 மீட்டர் உயரமுள்ள சுனாமி பதிவாகியுள்ளதாக, அவசரகால சூழ்நிலைகளுக்கான சூழல் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஜப்பானிலும் சுனாமி அலைகள் காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், சுனாமி எச்சரிக்கை குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகள் ஹவாயில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications