மனதை தூய்மையா வச்சுக்கோங்க டிரம்ப்... 6000 'கிரீன் டீ' பாக்கெட்டுகளை அனுப்பிய இந்திய நிறுவனம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்பிற்கு, 'மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் டிரம்ப்' எனகூறி இந்திய நிறுவனம் ஒன்று 6000 கிரீன் டீ பாக்கெட்களை அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக வரும் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளார். பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான டிரம்ப் மக்களிடம் வெறுப்பை தூண்டும் விதமாக தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த தேயிலை நிறுவனம் ஒன்று டொனால்ட் டிரம்பின் மனதைத் தூய்மைப்படுத்த 6000 'அஸ்ஸாம் கிரீன் டீ' பாக்கெட்டுகளை இலவசமாக அனுப்பியுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: "இந்தியாவில் இருந்து வணக்கம் டிரம்ப், நாங்கள் உங்களுக்கு மிக அதிகமாவே இயற்கையான கிரீன் டீ பாக்கெட்டுகளை அனுப்பியுள்ளோம். கிரீன் டீயானது உடலில் உள்ள தீய நச்சகளை அழிக்கும் தன்மை கொண்டது. இது மனதையும், உடலையும் தூய்மைப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தை திரும்ப பெற உதவுகிறது. மேலும் இது மனிதர்களை சிறந்தவர்களாக மாற்றுகிறது.
தயவு செய்து, உங்கள் நலனுக்காகவும், அமெரிக்காவின் நலனுக்காகவும், உலகத்தின் நலனுக்காகவும் கிரீன் டீ அருந்துங்கள் டிரம். உங்களை நீங்களே தூய்மைப்படுத்துவதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை. டொனால்ட் டிரம்ப்பால் மொத்த உலகமும் கவலையடைந்துள்ளது. அவரை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்ற போதிலும், அவரை எங்களால் மாற்ற முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த தேயிலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் ஷா கூறியதாவது: டிரம்க்கு அனுப்பியுள்ள கீரின் டீ நான்கு ஆண்டுகளுக்கு போதுமானது. கிரீன் டீ மூலமாக டிரம்ப் மாற்றம் அடைவார் என நாங்கள் நம்புகிறோம். இதனால் அவரது நாடு மற்றும் உலகத்திற்கு மிகப்பெரிய அளவில் நன்மை ஏற்படும். அவருக்கு மேலும் கிரீன் டீ தேவையென்றால் நாங்கள் மகிழ்சியுடன் வழங்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications