‛15 நாளில் ஊர் வருவேன்’.. போனில் சொன்ன இந்தியரின் உயிரை பறித்த துருக்கி நிலநடுக்கம்.. மனைவி கதறல்
அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜய் குமார் என்பவர் பலியாகி உள்ளார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி கதறி அழுதார். வேலை நிமித்தமாக துருக்கி சென்ற விஜய்குமார் வரும் 20ம் தேதி அங்கிருந்து நாடு திரும்ப இருந்ததாகவும், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 5ல் மனைவி, மகனிடம் பேசியதாகவும் விஜய் குமாரின் அண்ணன் அருண் குமார் உருக்கமான கூறி கண்ணீர் சிந்தியதால் துருக்கி நிலநடுக்கம் இந்திய குடும்பத்தை இடிந்துபோக செய்துள்ளது.
துருக்கியில் கடந்த 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் பக்கத்தில் உள்ள நாடான சிரியாவிலும் நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோலில் 7.8, 7.5 மற்றும் 6 என்ற அளவில் ஒரேநாளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவானதால் இருநாடுகளிலும் கட்டங்கள் இடிந்து விழுந்தன.
பல ஆயிரம் மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் ஏராளமானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

துருக்கியில் இந்தியர் பலி
இதற்கிடையே துருக்கியில் இந்தியா உள்பட பிற உலக நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் துருக்கியில் இருந்த இந்தியர் ஒருவர் மாயமானதாக கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அவரை தேடி வந்த நிலையில் இன்று அவரது உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் அவர் உத்தர காண்ட் மாநிலம் பாரிகார்வால் பகுதியை சேர்ந்த விஜய் குமார் காட் என்பதும், பெங்களூருவைச் சேர்ந்த ஆக்ஸி பிளாண்ட் இந்தியா எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் வேலை நிமித்தமான துருக்கி கிழக்கு அனடோலியா மாகாணத்தில் அமைந்திருக்கும் உள்ள மாலத்யா சென்றபோது நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது. அங்குள்ள 4ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கிய நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தது தெரியவந்தது.

அண்ணன் சொன்னது என்ன?
இவரது மரணத்தை துருக்கியில் இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. விஜய்குமாரின் இடது கையில் இருந்த டாட்டூ மூலம் குடும்பத்தினர் அடையாளம் கண்டு பலியை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் தான் விஜய்குமார் பற்றி அவரது அண்ணன் அருண் குமார் காட் உருக்கமான தகவல்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

ஒரே நிறுவனத்தில் பணி
‛‛நானும் எனது தம்பியும் பெங்களூரில் உள்ள ஆக்ஸி பிளாண்ட் இந்தியா நிறுவனத்தில் தான் ஒன்றாக வேலை செய்தோம். நிறுவனத்தில் இருந்து அவன் வேலை விஷயமாக துருக்கி சென்றான். ஜனவரி 23ம் தேதி விஜய் குமார் துருக்கி சென்றான். அங்கு ஓட்டலில் தங்கியிருந்தான். பிப்ரவரி 20ம் தேதி அவன் துருக்கியில் இருந்து திரும்புவதாக இருந்தது. இந்நிலையில் தான் தற்போது நிலநடுக்கத்துக்கு பலியாகி உள்ளான்.

நிலநடுக்கத்துக்கு முந்தைய நாள் பேச்சு
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் நாங்கள் அவனுக்கு போன் செய்து பார்த்தோம். ஆனால் அவன் எடுக்கவில்லை. நிலநடுக்கத்துக்கு முந்தைய நாளான பிப்ரவரி 5ல் அவனது மனைவி, 6 வயது மகன் ஆகியோர் போனில் பேசினான். அப்போது இன்னும் 15 நாளில் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளான். இந்நிலையில் தான் புதன்கிழமை அவன் மாயமாகி உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தற்போது அவன் இறந்துவிட்டான்'' என கண்ணீர் சிந்தி கதறி அழுதார். இறந்த விஜய் குமாருக்கு திருமணம் ஆகி மனைவி, 6 வயதில் மகன் உள்ளார்.

மனைவி கதறல்
இதற்கிடையே விஜய்குமாரின் இறப்பு செய்தியை கேட்டு அவரது மனைவி கதறி அழுதார். இன்னும் 15 நாளில் வீட்டுக்கு வருவேன் என விஜய் குமார் கூறிய நிலையில் அவரது மனைவி அவருடைய மனைவிக்கும், அவரது 6 வயது மகனுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் விஜய்குமாரின் குடும்பத்தில் பேரிடியாக விழுந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications