துபாயில் பெண்கள் கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்த இந்திய வாலிபருக்கு சிறை

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் பெண்கள் கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்த இந்திய வாலிபருக்கு 3 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.

துபாயில் வேலை பார்த்து வந்த 26 வயது வாலிபர் பெண்கள் கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனை விதித்ததுடன் அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.

கழிப்பறையின் சுவர் மற்றும் மின்விசிறியை சுத்தம் செய்ய தான் அங்கு சென்றதாக அந்த வாலிபர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அவர் கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்ததாக புகார் தெரிவித்த சவுதியைச் சேர்ந்த 47 வயது பெண் மொழிபெயர்ப்பாளர் கூறுகையில்,

அந்த வாலிபர் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். நான் கழிப்பறைக்குள் நுழைந்த உடன் வியர்வை வாடை 4 முதல் 5 நிமிடங்களுக்க வந்தது. அவர் எட்டிப்பார்த்ததை பார்த்து நான் கூச்சலிட்டதும் அவர் ஓடிவிட்டார்.

கழிப்பறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அவர் தோட்டத்தில் இருந்தார் என்றார்.

அந்த கழிப்பறையை சுத்தம் செய்ய அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கழிப்பறையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே அவர் அங்கு செல்ல வேண்டும். அது சிறிய இடம் என்பதால் கழிப்பறையில் ஆள் உள்ளார்களா என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று ஈராக்கைச் சேர்ந்த மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+