ஈராக்கில் சிக்கியோரை மீட்பதற்காக பெர்சிய வளைகுடாவில் இந்திய போர்க்கப்பல்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: ஈராக்கில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக பெர்சிய வளைகுடாவுக்கு இந்திய போர்க்கப்பல் சென்றுள்ளது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் போர் உக்கிரமடைந்துள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்களை பாதுகாப்பது மற்றும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தியது. இதனடிப்படையில் ஐ.என்.எஸ். மைசூர் என்ற போர்க்கப்பல் பெர்சிய வளைகுடா பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பற்படையின் மற்றொரு போர்க்கப்பல் ஐ.என்.எஸ். தர்காஸ் ஏடன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் தேவைப்படும் போது இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய விமானப்படையின் போர் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications