இங்கிலாந்தின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் தேர்வு

இங்கிலாந்தில் உள்ள லங்காஷயரில் இருக்கும் பர்ன்லீயில் தனது தாய் சுஜாதாவுடன் வசித்து வருபவர் அசானிஷ் கல்யாணசுந்தரம்(18). அவர் புனித ஜோசப் பார்க் ஹில் பள்ளியில் படித்து வருகிறார். அவர் பள்ளி இறுதித் தேர்வான ஏ லெவல் தேர்வில் கணக்கு, இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் நெருக்கடியான சிந்தனை என்ற 5 பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடக்கும் இந்த ஏ லெவல் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெறுவது மிகவும் கடினமாகும். அப்படி இருக்கையில் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள அசானிஷ் இங்கிலாந்தின் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் வரும் அக்டோபர் மாதம் மருத்துவம் படிக்க கல்லூரிக்கு செல்கிறார்.
அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணராக ஆசை உள்ளது. ஆனால் எந்த துறையில் நிபுணர் ஆவது என்பது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
அசானிஷ் அண்மையில் தான் ட்யூக் ஆப் எடின்பர்க்கின் தங்க பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வரும் நவம்பர் மாதம் லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில் நடக்கும் விழாவில் அவர் அந்த விருதை இளவரசர் பிலிப் கையால் பெறுகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications