யு.எஸ்.: துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரை காயப்படுத்திய இந்திய வக்கீல் சுட்டுக் கொலை
நியூயார்க்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரை காயப்படுத்திய இந்திய வம்சாவளி வழக்கறிஞரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசித்து வந்தவர் நாதன் தேசாய்(46). இந்திய வம்சாவளி வழக்கறிஞர். அவர் தனது தந்தை பிரகாஷ் தேசாயுடன்(80) வசித்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை காலை நாதன் தனது போர்ஷா காரில் தான் வேலை செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சாலையோரம் உள்ள மரத்திற்கு அருகே காரை நிறுத்திவிட்டு அதில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சாலையில் செல்லும் கார்களை நோக்கி சுட்டுள்ளார்.
இதில் 9 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர்களையும் சுட்டுள்ளார். பதிலுக்கு போலீசார் சுட்டதில் நாதன் உயிர் இழந்தார்.
வழக்கறிஞர் தொழில் கடந்த 2 மாதங்களாக சரியாக போகாததால் விரக்தியில் இருந்த அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். நாதன் நாசீக்களை ஆதரிப்பது போன்று ஸ்வஸ்திக் முத்திரை உள்ள ராணுவ உடை அணிந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
அவரது வீட்டில் ஏராளமான துப்பாக்கிகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். வழக்கறிஞர் என்பதால் தன்னை பார்க்க வரும் குற்றவாளிகளிடம் இருந்து காத்துக்கொள்ள துப்பாக்கிகளை வைத்திருந்தார் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications