யு.கே.: நிர்வாணமாக பிஎம்டபுள்யூ கார் ஓட்டி சிக்கிய இந்திய வம்சாவளி நபர்
லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் சிறை பாதுகாவலர் நிர்வாணமாக கார் ஓட்டியதால் அவர் 6 மாத காலம் எந்த வாகனமும் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் சிங்(37). முன்னாள் சிறை பாதுகாவலர். அவர் நிர்வாணமாக தனது பிஎம்டபுள்யூ காரில் சாலையில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பேருந்து அருகே தனது காரை நிறுத்தியுள்ளார்.

பேருந்தில் இங்கிலாந்துக்கு சுற்றுலா வந்த பிரான்சை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஆனந்த் சிங் நிர்வாணமாக இருப்பதை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கான்டர்பரி கிரவுன் நீதிமன்றம் ஆனந்துக்கு ரூ. 20 ஆயிரத்து 500 அபராதம் விதித்ததுடன் அவர் எந்த வாகனமும் ஓட்ட 6 மாத கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மனோதத்துவ நிபுணர்களை அணுகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனந்த் இதற்கு முன்பும் இரண்டு முறை காரில் இருந்தபடியே ஆடையை அவிழ்த்து சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications