5 லட்சம் பேரை நாடு கடத்துவேன்.. இந்திய வம்சாவளி ரூபி தல்லா அதிரடி.. இவர் தான் கனடாவின் லேடி டிரம்ப்?
ஒட்டாவா: நான் கனடா பிரதமர் ஆனால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று அந்த நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் உள்ள இந்திய வம்சாவளியான ரூபி தல்லா வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் அவர் கனடாவின் பெண் டொனால்ட் டிரம்ப்பா? மாறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள்.

இதன்மூலம் அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி அளித்தார்.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த 20ம் தேதி அவர் அமெரிக்காவின் அதிபராக முறைப்படி பொறுப்பேற்ற நிலையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடு கடத்த தேவையான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. டொனால்ட் டிரம்பின் உத்தரவால் இந்தியாவை சேர்ந்த 18 ஆயிரம் பேர் விரைவில் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் கனடா, அமெரிக்கா இடையே தற்போது மோதல் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்பை போல் கனடாவின் பிரதமர் வேட்பாளர் ரேஸில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபி தல்லாவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நான் தான் கனடாவின் பெண் டொனால்ட் டிரம்ப் என கூறும் வகையில் அவரது அறிவிப்பு உள்ளது. இதுதொடர்பாக ரூபி தல்லா இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
கனடாவின் அரை மில்லியனுக்கும் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம், அரை மில்லியன் என்றால் 5 லட்சம்) மக்கள் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. புலம்பெயர்ந்த பெற்றோரின் ஒரு மகளாக நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாக கட்டியெழுப்ப உதவியிருப்பதை நான் நன்கு அறிவேன்.
ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இது சட்டவிரோதமானது. உங்களின் பிரதமராக நான் உங்களுக்கு ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது'' என கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ரூபி தல்லா கனடாவின் லிபரல் கட்சியை சேர்ந்தவர். இந்த கட்சியை சேர்ந்தவர் தான் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வந்தார். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கிடையே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்கட்சியிலேயே திடீரென்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோவை தொடர்ந்து லிபரல் கட்சி சார்பில் நிறைய பேர் பிரதமர் பதவி மீது கண்வைத்து காய்நகர்த்தி வருகின்றனர். அதில் ஒருவர் தான் இந்த ரூபி தல்லா. இவர் ஒரு இந்திய வம்சாவளி ஆவார். கனடாவின் பிரம்ப்டன்-ஸ்பிரிங்டாலி பகுதியின் எம்பியாக இருந்தார். 2004 முதல் 2011 வரை எம்பியாக அவர் நீடித்தார். தற்போது அவர் கனடாவின் பிரதமர் ரேஸில் உள்ளார்.
இதனை அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மிக்க நன்றி, கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன். லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் அடுத்த பிரதமராகவும் முதல் முதலாக பெண் ஒருவரை தேர்வு செய்து வரலாற்றை உருவாக்கும் விளிம்பில் நாம் இருக்கிறோம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ரூபி தல்லா லிபரல் கட்சியில் பிரதமர் ரேஸில் நுழைந்துள்ளார். இந்நிலையில் தான் நான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களை நாடு கடத்துவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் ரூபி தல்லா தான் டொனால்ட் டிரம்புக்கான கனடாவின் லேடி வெர்ஷனா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications