வாந்தி எடுத்த பையை தூக்கி டாக்சி டிரைவர் மீது எறிந்த இந்தியப் பெண் கைது.. கனடாவில்
டொராண்டோ: கனடாவின் கேல்க்ரி சிட்டியைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் டாக்ஸி டிரைவர் மீது வாந்தி நிரம்பிய ஒரு பையை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் இந்தச் செயலுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செலினா நாராயண் லாச்சபெல்லே என்னும் 33 வயதான அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 14 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டவுண்டவுன் கேல்க்ரியில் இருந்து அவருடைய வசிப்பிடமான நார்த்வெஸ் சாண்ட்ஸ்டோன் வேலி செல்வதற்காக டாக்சி பிடித்துள்ளார்.
சென்று கொண்டிருக்கும் போதே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. உடனே டாக்சி டிரைவர் அவருக்கு வாந்தியெடுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதால் பை ஒன்றினை கொடுத்துள்ளார். அப்பையை அவர் டாக்சியின் மேலேயே எறிந்துள்ளார்.
இதனையடுத்து அந்த டாக்சி டிரைவர் அப்பெண்ணிடம் காரினை சுத்தம் செய்வதற்கான பணத்தை கேட்டதற்கு அப்பெண் கேவலமாக திட்டி, இன்னொரு பையினை அந்த டிரைவரின் மேல் எறிந்துள்ளார்.
"அப்பெண் குடித்திருந்தார். மேலும், மிகவும் ஆவேசமான நிலையில் இருந்தார்" என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் குடும்பத்தினர் பின்னர் அப்பணத்தை டிரைவருக்கு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications