சவுதியில் தவித்த 6 தமிழர்களை தாயகம் அனுப்பி உதவிய இந்திய சோஷியல் ஃபோரம்!

Subscribe to Oneindia Tamil

சவுதி: தாயகம் திரும்ப முடியாமல் சவுதி அரேபியாவில் தத்தளித்த 6 தமிழர்களை இந்தியன் சோஷியல் போரம் மீட்டு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியன் சோஷியல் ஃபோரம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த அண்ணாமலை முருகேசன். செந்தில் கண்ணன். ஆறுமுகம் முருகேசன், சின்ன கருப்பசாமி. சுரேந்திரன் முத்துக்குமார். செந்தில் கண்ணப்பன். பெருமாள், ஜெயபாரதி ஆகியோர் சவூதி அரேபியா ரியாதில் உள்ள ஷிபா என்னுமிடத்தில் உள்ள ஒரு கம்பெனிக்கு வேலைக்கு வந்துள்ளார்கள்.

Indian social forum extend its help to 6 Tamils

அந்த கம்பெனியில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்துள்ளார்கள். பின்பு கம்பெனியில் வேலையில்லை எனக்கூறி அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

இந்த நிலையில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் பல்வேறு உதவிகளை முகநூல் வழியாக அறிந்து அதன் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவியை நாடினார்கள்.

அவர்களை இந்தியன் சோஷியல் போரம், ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் துணைத்தலைவர் முஹம்மதலி பாபு, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அனீஸ் முஹம்மது மற்றும் துணைத் தலைவர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கிக் கொடுத்து தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் தங்க வைத்து அவர்கள் நாடு திரும்பும் அனைத்து முற்சிகளையும் செய்து வந்தனர்.

சவூதி அரசின் சட்டங்களுக்கேற்ப விரைந்து செயல்பட்ட இந்த நிர்வாகிகள், சக தமிழர்களை தாயகம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனித நேய பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதற்கு பெரிதும் உதவி வரும் ஊடகங்களுக்கும் இணையதள ஆசிரியர்களுக்கும் இந்தியன் சோஷியல் ஃபோரம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+