தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம்!
தம்மாம்: சவுதி அரேபியா தம்மாம் மண்டல கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் சார்பில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் 06.09.2014 அன்று மாலை தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி தலைமையில் நடைபெற்றது.
பொது செயலாளர் திப்பு சுல்தான் மாதாந்திர செயல் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1: நிகழ்ச்சி தொடர்பான செய்திகளை தமது இணைய ளங்களில் வெளியிட்டு வரும் அனைத்து ஊடக பொறுப்பாளர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
2: அனைத்து கிளைகளிலும் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது.
3: பணி நிமித்தமாக சவுதி அரேபியாவுக்கு வந்துள்ள இந்திய மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளும், சட்ட உதவிகளும் வழங்குவது.
4: வரும் 26.09.2014(வெள்ளிக்கிழமை)மாலை 6.30 மணியளவில் தம்மாம் மாநகரில் "நாம் முன்னோக்கி செல்வோம்"என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடத்துவது என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிஹாத் கிளை நிர்வாகிகள் மக்தூம் நைனா, ஷமீம்,உமர் கத்தாப்,அல் ஜுபைல் கிளை நிர்வாகிகள் அய்யம் பேட்டை அன்சாரி,புதுப்பேட்டை ஆஷிக், தம்மாம் கிளை நிர்வாகிகள் குதுபுதீன்,சம்சுதீன்,அல்கோபார் கிளை நிர்வாகிகள் ஷேக் முகைதீன்,அப்துல் காதர் உள்ளிட்ட உயர்மட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications