இலங்கைக்குப் போன பாகிஸ்தான் போர்க் கப்பல்! சட்டென இந்தியா அனுப்பிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல்!
கொழும்பு: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நீர் மூழ்கி மற்றும் போர்க் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன. பாகிஸ்தானின் போர்க் கப்பலில் சீனா கொடுத்த அதிநவீன ராடார்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எழுப்பி உள்ளனர். ஒரே தருணத்தில் இருநாட்டு போர்க்கப்பல்கள் வருகை மிக முக்கியமானதாவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தெற்காசிய பிராந்திய அரசியலில் இலங்கை மிக முக்கியமான நாடு. இலங்கையை இந்தியா தமது கட்டுப்பாட்டில் பல்வேறு வகைகளில் வைத்திருந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் பிடியில் இருந்து விலகிய இலங்கை சீனாவின் வசமாகிவிட்டது.
இலங்கையில் சீனா மிக வலுவாக காலூன்றி நிற்கிறது. இலங்கைக்கு பெருமளவு கடனுதவி வழங்கும் சீனா, அதற்கு இணையாக சுயாட்சி பிரதேசங்கள் என இலங்கையின் நிலப்பரப்பை கைப்பற்றி வருகிறது. இதனால் இலங்கைக்குள் சீனாவின் காலனி பிரதேசங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்தியா பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்கிறது. இலங்கைக்கான கடனுதவிகளை பெருமளவு வழங்கியும் வருகிறது இந்தியா.
இந்நிலையில் இலங்கைக்கு பாகிஸ்தானின் அதிநவீன போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சி பெறுவதற்காகவே பாகிஸ்தான் போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் போர்க்கப்பலில் அதிநவீன சீனாவின் ராடார்கள் பொருத்தப்பட்டு வங்க கடல், இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியங்களை பாதுகாப்பு ஆய்வாளர்கள் எழுப்பி இருந்தனர்.
தற்போது பாகிஸ்தான் போர்க்கப்பல் வந்தடைந்த நிலையில் இலங்கைக்கு இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.வகீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் 168 கடற்படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் கடற்படையினரை இந்திய படையினர் சந்திப்பார்களா? என்பது தெரிவிக்கப்படவில்லை.
இலங்கையில் ஒரே நேரத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை முகாமிட்டிருப்பது பிராந்திய அரசியலில் முக்கியமான ஒரு நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications