ஷார்ஜாவில் குட்டீஸ்களுக்காக நூலகம் துவங்கிய இந்திய பெண்
ஷார்ஜா: ஷார்ஜாவில் பள்ளிக் குழந்தைகளுக்காக இந்திய பெண் ஒருவர் நூலகம் துவங்கி நடத்தி வருகிறார்.
ஷார்ஜாவில் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் வகையில் ‘திவ்யா நூலகம்' கடந்த டிசம்பர் மாதம் முதல் அபு சகரா பூங்கா அருகில் செயல்பட்டு வருகிறது.
'இன்றைய வாசகர் நாளைய தலைவர்' எனும் வாசகத்தை மையமாகக் கொண்டு இந்நூலகம் செயல்பட்டு வருவதாக நூலகத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யா கேஹானி தெரிவித்துள்ளார்.

திவ்யா கேஹானி
திவ்யா கேஹானி உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது குழந்தைகள் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் ஏராளமான நூல்கள் வாங்கி வருகிறார்.

நல்ல எண்ணம்
தனது குழந்தைகளுக்காக வாங்கும் நூல்கள் பிற குழந்தைகளுக்கும் பயனளிக்க வேண்டும் எனும் நன்னோக்கத்துடன் இந்நூலகம் துவக்கப்பட்டுள்ளதாக திவ்யா தெரிவித்தார்.

நூல்கள்
துவக்கத்தில் ஆங்கில நூல்கள் மட்டும் இருந்தாலும் விரைவில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்களும் இந்நூலகத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றார் திவ்யா.

பெற்றோர்
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நூல்களை வாங்கிக் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினாலும் நூலகத்தை தங்களது குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்று திவ்யா கேட்டுக் கொண்டார்.

பணிநேரம்
நூலகம் தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. இது குறித்து மேலும் விபரம் அறிய 06 537 04 08 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications