எபோலா வைரஸ் பரவியுள்ள லைபீரியாவில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள்
மான்ரோவியா: எபோலா வைரஸ் பரவி வரும் லைபீரியாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, நைஜீரியா, சியர்ரா லியோன், கினியாவில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. இந்த நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிலும் லைபீரியாவில் மட்டும் இதுவரை 413 பேர் பலியாகியுள்ளனர்.

எபோலா வைரஸுக்கு பயந்து லைபீரியா மற்றும் சியர்ரா லியோனுக்கான விமான சேவையை பல நாட்டு விமான நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. லைபீரிய தலைநகர் மான்ரோவியா மற்றும் சியர்ரா லியோன் தலைநகரான ஃப்ரீடவுன் ஆகியவற்றுக்கான விமான சேவையை இன்றில் இருந்து நிறுத்தியுள்ளது கென்யா ஏர்வேஸ். ப்ருஸெல்ஸ் ஏர்லைன்ஸ் மட்டுமே தற்போது முழு சேவையை வழங்கி வருகிறது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், பான் ஆப்பிரிக்கன் ஏர்லைன் ஏ.எஸ்.கே.ஒய் மற்றும் உள்ளூர் விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட விமானங்களை மட்டுமே இயக்கி வருகின்றன. இப்படி விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் லைபீரியாவில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ஒரு புறம் எபோலா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற பயம், மறுபுறம் விமான சேவை இல்லாமல் இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்ற கலக்கத்தில் உள்ளனர் இந்தியர்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 45 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications