இனி பிரமோஸ் ஏவுகணையால் தாக்க முடியாது? ஜெர்மனியிடம் கையேந்தும் பாகிஸ்தான்.. IRIS-T என்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பிரமோஸ் ஏவுகணை கொண்டு நம் நாடு தாக்கியது. பிரமோஸ் ஏவுகணை அடித்த அடியில் அலறிய பாகிஸ்தான் நம் நாட்டிடம் சரணடைந்தது. இந்நிலையில் தான் நம் நாட்டின் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதலை தடுக்க ஜெர்மனி மற்றும் இத்தாலியிடம் உதவி கோர பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஜெர்மனியின் IRIS- T வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை வாங்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இது என்ன? இது வந்தால் பாகிஸ்தானை பிரமோஸ் ஏவுகணை வைத்து வரும் காலத்தில் தாக்க முடியுமா? இல்லையா? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். அதன்பிறகு நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

pakistan germany

கடந்த மாதம் 7 ம் தேதி இரவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதேபோல் கடந்த மாதம் 10ம் தேதி விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் என்று மொத்தம் 12 இடங்களை நம் நாடு அழித்தது.

பாகிஸ்தான் மீதான இந்த தாக்குதலுக்கு நம் நாடு கையில் எடுத்த ஆயுதம் பிரமோஸ் ஏவுகணையாகும். நம் நாட்டிடம் இருக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும். ரஷ்யா - நம் நாடு இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்தது. இந்த ஏவுகணையை வைத்து தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை கதிகலங்க வைத்தது நம் நாடு. அதுமட்டுமின்றி பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நம்மிடம் மண்டியிட்டது. மோதல் முடிவுக்கு வந்தது.

இந்த பிரமோஸ் ஏவுகணை என்பது பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம், விமானப்படை தளம், ராணுவ தளம் மட்டுமின்றி சீன தயாரிப்பான வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமையும் தாக்கி அழித்தது. அதுமட்டுமின்றி சீனாவின் தயாரிப்பான பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் HQ-9B மற்றும் HQ-16 ஆகிய வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களால் பிரமோஸை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் எதிர்காலத்திலும் நம் நாடு பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தினால் பாகிஸ்தானுக்கு பெருத்த சேதம் ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக தான் பாகிஸ்தான் இப்போது வேறு பிளானை கையில் எடுத்துள்ளது.

நம் நாட்டின் பிரமோஸ் ஏவுகணையின் அதிரடி தாக்குதலில் நிலைக்குலைந்து போன பாகிஸ்தான் இப்போது 2 நாடுகளிடம் உதவி கோர உள்ளது. அந்த நாடுகளின் பெயர் ஜெர்மனி மற்றும் இத்தாலி. இந்த 2 நாடுகளிடம் இருந்து வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை வாங்க பாகிஸ்தான் பரிசீலனை செய்து வருகிறது. அதன்படி ஜெர்மனியிடம் இருந்து IRIS-T, இத்தாலியிடம் இருந்து CAMM-ER ஆகிய வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களில் ஒன்றை வாங்க பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது.

பாகிஸ்தான் ஜெர்மனியின் IRIS-T மற்றும் இத்தாலியின் CAMM-ER ஆகிய வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் மீது கண்வைத்துள்ளது. இதில் IRIS-T என்பதை பாகிஸ்தான் வாங்கலாம். ஏனென்றால்IRIS-T என்பது இப்போது உக்ரைன் பயன்படுத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் அட்டாக்குகளை முன்கூட்டியே ஜெர்மனியின் IRIS- T என்பது கணித்து தடுத்து வருகிறது. குறிப்பாக பிரமோஸ் திறன் கொண்ட ஏவுகணைகளையும் தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது.

இத்தாலியின் CAMM-ER வான்வெளி பாதுகாப்பு அமைப்பின் இடைமறிப்பு வேகம் என்பது பிரமோஸ் ஏவுகணையை விட குறைவாக உள்ளது. இதனால் பாகிஸ்தானின் முதல் சாய்ஸாக IRIS - T வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமாக தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் இந்த IRIS-T அமைப்பு என்பது மீடியம் ரேஞ்ச் வான்வெளி பாதுகாப்பு அமைப்பாகும். இது 40 கிலோமீட்டர் ரேஞ்ச்சில் எதிரிகளின் ஏவுகணை, ட்ரோன்களை கண்டுபிடிக்கும். 20 கிலோமீட்டர் தொலைவில் வரும்போது அதனை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

உக்ரைனை நோக்கி ரஷ்யா ஏவிய பி-800 ஓனிக்ஸ் உட்பட 60 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்த IRIS - T வான்வெளி அமைப்பு இடைமறித்துள்ளது. பிரமோஸ் ஏவுகணையும் இந்தியா - ரஷ்யா கூட்டணியில் தயாரிக்கப்பட்டதாகும். இதனால் IRIS - T-யை வாங்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் ஜெர்மனி IRIS - T வான்வெளி பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானுக்கு வழங்குமா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கு நம் நாடு தான் காரணம்.

அதாவது பாகிஸ்தானை ஒப்பிடும்போது ஜெர்மனியுடன் நம் நாடு நல்ல உறவில் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் தான் ஜெர்மனி நம் நாட்டுடன் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதனால் ஜெர்மனி பாகிஸ்தானுக்கு உதவி செய்யுமா என்பது கேள்வியாக எழுந்துள்ளது. இருப்பினும் நம் நாட்டின் பிரமோஸ் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் ஜெர்மனியிடம் இருந்து IRIS - T வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்க திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியிடம் இருந்து IRIS - T வான்வெளி பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு கிடைக்குமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+